IBPS SO 2025; வங்கி வேலை; 1007 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

வங்கி வேலை வேண்டுமா? IBPS மூலம் பொதுத்துறை வங்கிகளில் 1007 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலா
பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர்கள் வங்கி பணியாளர் தேவாணையம் (IBPS) வெளியிட்டு இருக்கும் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நாட்டில் உள்ள பொத்துறை வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு பணியினை IBPS மேற்கொள்கிறது. இந்த அமைப்பு கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்கிறது. இதில் தற்போது சிறப்பு அதிகாரிகள் (SPECIALIST OFFICERS) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 1007 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.