மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக நேற்று முன்தினம் நிரம்பியது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 88,000 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.

மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக நேற்று முன்தினம் நிரம்பியது.

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு உபரிநீர் திறப்பு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக நேற்று முன்தினம் நிரம்பியது.

மேட்டூர் அணைக்கு நேற்று மாலை முதல் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் மற்றும் 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது .

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிப்பால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 88,000 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.

இந்நிலையில், சேலம் மேட்டூர் அணையில் இன்று மாலை 6 மணியில் இருந்து1 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது