ஒடிசா வனத்துறை அதிகாரி வீட்டில் ரெய்டு: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்..

வனத்துறை அதிகாரிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் தங்கக்காசுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தின் ஜஜ்புர் மாவட்டத்தில் துணை வனக் காப்பாளராக இருக்கும் ராமச்சந்திர நேபாக் என்பவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக அவருக்குச் சொந்தமான 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். பல குழுவினர் இணைந்து நடத்திய இந்தச் சோதனையில் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை 1.5 கோடி ரூபாய் எண்ணப்பட்ட நிலையில், இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பணம் எண்ணும் பணி நடக்கிறது.
மேலும் 4 கிலோ தங்க பிஸ்கட்கள் மற்றும் தலா 10 கிராம் கொண்ட 16 தங்கக்காசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஒரு வாரத்தில் வனத்துறையில் அதிக சொத்து சேர்த்ததாக நடக்கும் இரண்டாவது ரெய்டு இதுவாகும்.