இன்றைய இலக்கியம்

தாளாண்மை- அதிகாரம்
பொருட்பால்--துறவறவியல்
பாடல் எண்:193
"உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்
சிறுதேரை பற்றியும் தின்னும்; - அறிவினால்
கால்தொழில் என்று கருதற்க கையினால்
மேல் தொழிலும் ஆங்கே மிகும்."
- சமண முனிவர்கள்
பொருளுரை:
வலிமை பொருந்திய புலியும் தனக்குரிய இறைச்சியுணவு ஒரு நாள் கிடைக்கவில்லையெனில் சிறிய தேரையைப் பிடித்துத் தின்னும்,ஆதலால் அறிவினால் ஆராய்ந்து எந்தச் சிறிய தொழிலையும் அற்பமான தொழில் என்று எண்ணவேண்டா அந்த அற்பமான தொழிலே முயற்சியால் உயர்ந்த தொழிலாக மேம்படும். (தொழில் சிறியதாயினும் அக்கறையுடன் செய்தால் உயர்வு கிடைக்கும் என்பதாம்).