இன்றைய திருக்குறள்

திருக்குறள்
இனியவை கூறல்- அதிகாரம்
குறள் எண்:91
"இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்".
-திருவள்ளுவர்
குறள் விளக்கம் :
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.