டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மாநிலங்கள் இடம் பற்றிய சுவாரசியமான கேள்வி! பதில் சொல்லுங்க பார்ப்போம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடந்து முடிந்தது. சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இன்று 318 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் சில கேள்விகள் எளிமையாகவும், சில கேள்விகள் யோசித்து எழுதக் கூடிய வகையிலும் இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். இதில், மாநிலங்களின் இடம் பற்றிய சுவாரசியமான கேள்வி பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கேள்விக்கு உங்களால் விடை சொல்ல முடியுமா என்பதை பாருங்கள்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்பட பல்வேறு பதவிகளுக்கு இந்த தேர்வு நடைபெற்றது. குரூப்-4 பணிகளில் 3,935 காலி இடங்கள் இருப்பதாக டி.என்.பி.எஸ்சி அறிவித்து இருந்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 314 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வு எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் பெரும்பாலானோர் தெரிவித்தனர். சில கேள்விகள் எளிமையாக இருந்தாலும் தேர்வர்கள் மிகவும் யோசித்து எழுதக்கூடிய அளவுக்கு தேதி வாரியிலான கேள்விகளும் இடம் பெற்று இருந்தது.
குறிப்பாக மாநிலங்களின் பெயர்கள் மற்றும் மாநிலங்கள் இருக்கும் பகுதி என்று கேட்கப்பட்ட கேள்வி விடையளிக்க கடினமாக இருந்ததாக குரூப் 4 தேர்வர்கள் பலரும் கூறியதை பார்க்க முடிந்தது. குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியின் விவரம் வருமாறு:-
மாநிலங்களின் பெயர் - மாநிலங்கள் இருக்கும் பகுதி
a. இமாசல பிரதேசம் - 1. A
b. ராஜஸ்தான் -2. D
c. மேற்கு வங்காளம் - 3.B
d. அந்தமான் நிகோபார் மற்றும் தீவுகள் - 4. C
இந்த கேள்விகள்தான் ரொம்பவே குழப்பும் வகையில் இருப்பதாக தேர்வர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். குரூப் 4 தேர்வை பொறுத்தவரை சிலபஸ் மாற்றப்பட்டுள்ள நிலையில், கடந்த முறையை விட கொஞ்சம் தேர்வு கடினமாக இருந்ததாக சில தேர்வர்களும் கூறினர்.
இன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான விடைத்தாள்கள் பலத்த பாதுகாப்புடன் டிஎன்பிஎஸ்சி அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு விடைகள் திருத்தும் பணி தொடங்கும். இன்னும், சில நாட்களில் விடைக்குறிப்பை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகரன் தெரிவித்தார். மேலும், குரூப் 4 காலிப்பணியிடங்களும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.