குழம்பில் உப்பு அதிகமாகிடுச்சா..? உடனே இதை செஞ்சு சரி பண்ணிடுங்க.

குழம்பில் உப்பு அதிகமாகிடுச்சா..? உடனே இதை செஞ்சு சரி பண்ணிடுங்க.
குழம்பில் உப்பு அதிகமாகிடுச்சா..?

சமைக்கும்போது எந்த சிந்தனைகளும் இல்லாமல் கவனம் செலுத்தி சமைக்க வேண்டும் என்பார்கள். ஒருவேளை கவனக்குறைவால் காரம், உப்பு என இரண்டு சுவையில் ஒன்று அதிகமாகிவிட்டாலும் அந்த உணவை குப்பைக்குதான் கொட்ட வேண்டும். ஆனால் சமைத்த உங்களுக்குதான் நேர விரயம். செலவு விரயம். இனி அப்படி செய்ய வேண்டாம்

உணவை சமைப்பது என்பது கலை என்பார்கள். அதில் , காரம், உப்பு, என அனைத்தும் சரியான பதத்தில் சேர்த்தால்தான் அந்த உணவின் சுவை நினைத்தபடி கிடைக்கும். இதற்காகவே சமைக்கும்போது எந்த சிந்தனைகளும் இல்லாமல் கவனம் செலுத்தி சமைக்க வேண்டும் என்பார்கள். ஒருவேளை கவனக்குறைவால் இரண்டு சுவையில் ஒன்று அதிகமாகிவிட்டாலும் அந்த உணவை குப்பைக்குதான் கொட்ட வேண்டும். ஆனால் சமைத்த உங்களுக்குதான் நேர விரயம். செலவு விரயம். இனி அப்படி செய்ய வேண்டாம். நொடியில் அந்த உணவின் சுவையை நினைத்தபடி சரி செய்துவிடலாம். அப்படி உணவில் உப்பு அதிகமாகிவிடால் என்ன செய்வது என்பதை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்

வெங்காயம் தக்காளி விழுது : குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் உடனே வெங்காயம் தக்காளியை மைய அரைத்து அதை குழம்பி சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள். இவ்வாறு செய்வதால் உப்பு குறைந்துவிடும்.

கோதுமை மாவு உருண்டை : குழம்பில் உப்பு அதிகமானதும் கோதுமை மாவை சப்பாத்திக்கு பிசைவதுபோல் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொதிக்கும் குழம்பில் போட்டு கொதிக்கவிடுங்கள். பின் இறுதியாக அந்த உருண்டைகளை எடுத்துவிடுங்கள். இவ்வாறு செய்வதால் மாவு குழம்பில் உள்ள உப்பை உறிஞ்சிவிடும்

தயிர் : குழம்பில் உப்பு அதிகரித்திருப்பதை குறைக்க தயிர் சேர்த்து கலந்து கொதிக்கவிடுங்கள். இவ்வாறு செய்தால் உப்பு குறையும். இது குழம்பை விட தொக்கு போன்ற உணவுக்கு இந்த டிப்ஸ் பயன்படுத்துங்கள்.

உருளைக்கிழங்கு : உப்பு நிறைந்த குழம்பில் உருளைக்கிழங்கு சேர்த்து கொதிக்க வைத்தால் கிழங்கு உப்பின் தன்மையை உறிஞ்சு விடும்

.எலுமிச்சை சாறு : சமைத்த குழம்பில் எலுமிச்சை சாறு பிழிந்துவிட உப்பு தன்மை நீங்கி உணவின் சுவையை எலுமிச்சையின் புளிப்புத்தன்மை சமன் செய்துவிடும்

தண்ணீர் : குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துவிடுங்கள். இதுவும் மிகச்சிறந்த எளிய வழி.