தாய்லாந்துக்கு கடும் போட்டியை கொடுக்கும்... இந்தியாவின் மிக அழகிய 6 சுற்றுலா இடங்கள்

தாய்லாந்துக்கு கடும் போட்டியை கொடுக்கும்... இந்தியாவின் மிக அழகிய 6 சுற்றுலா இடங்கள்
இந்தியாவின் மிக அழகிய 6 சுற்றுலா இடங்கள்

இயற்கை அழகு நிறைந்த அழகிய கடற்கரைகள், பவளப்பாறைகள், காடுகள் என சுற்றுலா பயணங்களுக்கு மிகச்சிறந்த பயண அனுபவத்தை கொடுக்கும் நாடாக தாய்லாந்து திகழ்கிறது. ஆனால் இந்தியாவிலேயே அதற்கு இணையாக இயற்கை அழகு கொண்ட சிறந்த இடங்கள் உள்ளன.

சுற்றுலாவுக்கான மிகப் பிரபலமான இடங்களில் ஒன்றாக திகழ்வது தாய்லாந்து. இயற்கை அழகு நிறைந்த அழகிய கடற்கரைகள், பவளப்பாறைகள், காடுகள் என சுற்றுலா பயணங்களுக்கு மிகச்சிறந்த பயண அனுபவத்தை கொடுக்கும் நாடாக திகழ்கிறது. ஆனால் இந்தியாவிலேயே அதற்கு இணையாக இயற்கை அழகு கொண்ட சிறந்த இடங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

அந்தமான் தீவுகள்

அழகிய கடற்கரைகள் பவளப்பாறைகள் நிறைந்த தாய்லாந்தின் ஃபூகேட் என்னும் தீவு நகரத்திற்கு இணையான அழகை கொண்டது அந்தமான் தீவுகள் இங்கே, ஹேவ்லாக் தீவு, ராதா நகர் கடற்கரை ஆகியவை கண்களுக்கும் மனதிற்கும் விருந்தை (Travel Tips) அளிக்கும். அந்தமான் சிறை லைட்டன் சவுண்ட் ஷோ ஆகியவையும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள். சாகர் தீவில் ஸ்கூபா டைவிங் உள்ளிட்ட நீர் விளையாட்டுகளை அனுபவிக்கலாம்.

கோவா

தாய்லாந்து தீவுகளுக்கு இணையான அழகை கொண்டுள்ள கோவா கடற்கரைகள், மிக அழகிய கடற்கரைகளில் ஒன்றாக உள்ளது. கோவா கடற்கரைகளில் நீங்கள் நீர் விளையாட்டுகளில் ஈடுபடலாம், கடற்கரைகளில் ஓய்வெடுக்கலாம். பாகா கடற்கரை கோல்வா கடற்கரை, அஞ்சுனா கடற்கரை ஆகியவை கண்டிப்பாக செல்ல வேண்டிய இடங்கள். அதோடு இங்கே உள்ள நீர்வீழ்ச்சிகளும் உங்களுக்கு அற்புத அனுபவத்தை கொடுக்கும்.

தாய்லாந்தில் பல கோவில்கள் மற்றும் தியானம் செய்வதற்கான பிரத்தியேக இடங்கள் உள்ளன. அதற்கு கடும் போட்டியை கொடுக்கும் வகையில், இமயமலை அடிவாரத்தில், கரையில் அமைந்துள்ள ரிஷிகேஷ் ஆன்மீக அனுபவத்தை தரும் சிறந்த இடம். இங்கு மன அமைதியை பெறலாம்.

பாண்டிச்சேரி அல்லது புதுச்சேரி

புதுச்சேரி ஒரு ஐரோப்பிய கடற்கரை நகரம் எனக் கூறலாம். பிரெஞ்சு காலனியாக இருந்த வரலாற்றுப் பின்னணியை கொண்ட இந்த இடம் பிரெஞ்சு கட்டிடக்கலை, அழகிய கடற்கரைகள் இயற்கை எழில் சூழ்ந்த பல்வேறு இடங்கள், ஆன்மீக தலங்கள் என பல சிறப்பு அம்சங்களை தன் உள்ளே கொண்டுள்ளது. இங்குள்ள கடற்கரையில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் பார்க்க மிகவும் அழகானவை. கூட்டில் அமைந்துள்ள சாலைகள் இதன் தனிச்சிறப்பு.

கோகர்ணா

கர்நாடக மாநிலத்தின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள சிறிய அழகிய கடற்கரை நகரம் தான். இங்குள்ள அழகிய கடற்கரைகள், பிரம்மாண்ட உணர்வைத் தரும் கோவில்கள் ஆகியவை மனதை கொள்ளை கொள்பவை. குட்னி காணப்படும் தங்க மணல் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும். கோகர் அண்ணாவின் கடற்கரைகளில் ஸ்கூபா டைவிங் படகு சவாரி போன்ற சாகச விளையாட்டுகளையும் அனுபவிக்கலாம்

மேகாலயா

வடகிழக்கு மாநிலமான மேகாலயா, தாய்லாந்தின் மழைக்காடுகளுக்கு இணையான அழகை கொண்டது. பசுமையான காடுகளுடன் இயற்கை அழகு கொஞ்சும் இந்த இடத்தில் உள்ள நீர்வீழ்ச்சிகள் குகைகள் மற்றும் இயற்கை பாலங்கள் மனதை கொள்ளை கொள்பவை

.