தட்டித் தூக்கப் போகுது தூத்துக்குடி....

தூத்துக்குடி: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி விமான நிலையத்தை மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. சுமார் 250க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கும் ஏர்பஸ் ஏ321 ரக விமானங்கள் வந்து செல்லும் வகையில் இந்த பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில், அதனை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்பணிக்கிறார். இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது...
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது உலகம் முழுவதற்கும் இங்கிருந்து விமான போக்குவரத்து வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக திருச்சி, மதுரையில் விமான நிலையங்கள் உள்ளன..
ஆனால், சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி விமான நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நிலைமை தலைகீழாக இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே சென்னைக்கு அடுத்தபடியாக பஸ், விமானம், ரயில், கப்பல் என அனைத்து போக்குவரத்து வசதிகளையும் கொண்டது தூத்துக்குடி தான்...
தூத்துக்குடியில் ஏற்கனவே பல்வேறு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இதனால் இறக்குமதியும் ஏற்றுமதியும் செய்யும் நகரமாக தூத்துக்குடி இருக்கிறது. குறிப்பாக குணசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் வரும் காலங்களில் பல்வேறு நாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தூத்துக்குடிக்கு அதிகமான பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது..
தற்போது, துாத்துக்குடி - சென்னை இடையே, தினமும் ஐந்து முறையும், துாத்துக்குடி - பெங்களூரு இடையே தினமும் இரண்டு முறையும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில்,கூடுதல் விமானங்களை கையாளும் வகையில், 227.33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய முனையம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கியது..