பிக் பாஸ் ரித்விகாவுக்கு எங்கேஜ்மென்ட்.. மாப்பிள்ளை இந்த பிரபலம் தான்.. குவியுது வாழ்த்து

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் இரண்டாவது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வெற்றி பெற்ற ரித்விகாவுக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படங்களை ரித்விகா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகர்கள் நடிகைகளுக்கு பெரிய அளவில் பிரபலம் இல்லாமல் இருந்தபோது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துகொண்டு சின்னத்திரை மக்கள் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவர்தான் ரித்விகா. இவர் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் . பெரிய அளவில் சண்டை சச்சரவுகளில் ரித்விகா ஈடுபடவில்லை என்றாலும் கடைசியில் அவர் டைட்டில் வின்னராக தேர்வு செய்
சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகர்கள் நடிகைகளுக்கு பெரிய அளவில் பிரபலம் இல்லாமல் இருந்தபோது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துகொண்டு சின்னத்திரை மக்கள் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவர்தான் ரித்விகா. இவர் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் . பெரிய அளவில் சண்டை சச்சரவுகளில் ரித்விகா ஈடுபடவில்லை என்றாலும் கடைசியில் அவர் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு ஒரு சில திரைப்படத்தில் ரித்விகா நடித்திருந்தார். அதிலும் இவர் பிரபலமானது என்றால் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில் தான். அந்த திரைப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ரித்விகா நடித்திருந்தார். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்று இருக்கும் ரித்விகா ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டி வருகிறார். ஆனாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது அவருக்கு மட்டும் அல்ல அவருடைய ரசிகர்களுக்கும் வருத்தம் தான்
மெட்ராஸ் திரைப்படத்திற்கு பிறகு ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்திருந்தார். ஆனால் இவர் முதல் முதலாக சினிமாவில் அறிமுகமானது பரதேசி என்ற திரைப்படத்தின் மூலம் தான். அதற்குப் பிறகு இருமுகன், ஒரு நாள் கூத்து, டார்ச் லைட் போன்ற படங்களில் நடித்து வந்த ரித்விகாவுக்கு பிக் பாஸ்க்கு பிறகு சில திரைப்படங்கள் ஹிட் கொடுத்திருக்கிறது. அதிலும் இரண்டாம் உலகப் போரில் கடைசி குண்டு, வால்டர், சில நேரங்களில் சில மனிதர்கள், கடவர், ஆதார் என பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
சமீபத்தில் வெளியான லெவன் திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இப்போது சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கிறார். நேற்று ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த நாளில் பல பிரபலங்கள் தங்களுடைய திருமண அறிவிப்பை அறிவித்து வந்தனர். அந்த வரிசையில் ரித்விகாவிற்கு நேற்று எங்கேஜ்மென்ட் நடந்து முடிந்து இருக்கிறது
.எங்கேஜ்மென்டில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரித்விகா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் அவருடைய கணவரின் முகத்தை வெளியே சரியாக தெரியாதபடியே ப்ளர் செய்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். ஆனால் ரித்விகாவின் கணவர் அவருடைய நீண்ட நாள் நண்பரான வினோத் லட்சுமணன் என்பவர் என்பது தெரிய வந்திருக்கிறது. இவருடைய எங்கேஜ்மெண்டில் பெரிதாக சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டது போல தெரியவில்லை. ஆனால் இவர்களுடைய திருமணத்தில் பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் திருமணம் குறித்து அப்டேட் இன்னும் ரித்விகா தெரிவிக்கவில்லை. ரித்விகாவுக்கு சின்னத்திரை பிரபலங்கள், வெள்ளித்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.