விடிந்ததுமே வந்து விழுந்த குட் நியூஸ்.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை.. இவ்வளவு கம்மிய??

விடிந்ததுமே வந்து விழுந்த குட் நியூஸ்.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை.. இவ்வளவு கம்மிய??
சிலிண்டர் விலைகள் மாதத்தின் முதல் நாளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது ..

இந்தியாவில் சமையல் சிலிண்டர் விலைகள் மாதத்தின் முதல் நாளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையானது பொதுமக்களிடமும், வணிகர்களிடமும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையில் மாதந்தோறும் ஏற்றம் இறக்கம் இருந்து வருகிறது. சர்வதேச சந்தையின் நிலவரத்தை பொறுத்து, இந்த விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஆகஸ்ட் 1ஆம் தேதியான இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ வணிக எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.34.50 குறைக்கப்பட்டு ரூ.1,789-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வீடுகளில் பயன்படுத்தும் மானிய கேஸ் சிலிண்டரின் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிலிண்டர்களை தினசரி பயன்படுத்தும் உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளது.

ஜூலை மாத தொடக்கத்தில், சமையல் சிலிண்டரின் விலை ரூ.50-க்கு மேல் குறைக்கப்பட்டது. சென்னையில் வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1,823.50ஆக குறைக்கப்பட்டது. டெல்லியில் ரூ.1723.50இல் இருந்து ரூ.1665ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1826இல் இருந்து ரூ.1769 ஆகவும் குறைக்கப்பட்டது. ஆனாலும், வீட்டு சமையல் சிலிண்டரான 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றாமல் வைத்துள்ளன. அதன்படி, சென்னையில் ரூ.868.50ஆகவும், டெல்லியில் ரூ.853ஆகவும், கொல்கத்தாவில் ரூ.879ஆகவும், மும்பையில் ரூ.852.50ஆகவும் உள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆகிய நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் சராசரி விலை மற்றும் அந்நிய செலாவணி மாற்று விகிதத்தை பொருத்து, மாதந்தோறும் முதல் தேதியில் சிலிண்டரின் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை மொத்த எல்பிஜியில் சுமார் 90% வீட்டு பயன்பாட்டுக்கும், 10% வணிக, தொழில்துறை மற்றும் வாகனத் துறைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.