கரும்பு தோட்டத்தில் சுகர் பேபி! ஓனர் டார்ச் அடித்ததுமே கம்பத்தின் பின்னால் பதுங்கிய குட்டி யானை!

கரும்பு தோட்டத்தில் சுகர் பேபி! ஓனர் டார்ச் அடித்ததுமே கம்பத்தின் பின்னால் பதுங்கிய குட்டி யானை!
கரும்பு தோட்டத்தில் சுகர் பேபி! ஓனர் டார்ச் அடித்ததுமே கம்பத்தின் பின்னால் பதுங்கிய குட்டி யானை!

டெல்லி: தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் நுழைந்து கரும்புகளை ருசித்துக் கொண்டிருந்த குட்டி யானை ஒன்று, தோட்ட உரிமையாளர் டார்ச் அடித்துப் பார்த்தபோது, பதற்றமடைந்து ஒரு கம்பத்தின் பின்னால் மறைந்து கொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

கரும்பு விளைச்சலுக்குத் தயாராக இருந்ததால், தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தின் உரிமையாளர் தினமும் இரவு நேரத்தில் காவலுக்கு வருவது வழக்கம். அவர் தூங்கும் நேரம் பார்த்து, யானைகள் கூட்டம் ஒன்று கரும்புத் தோட்டத்திற்குள் நுழைந்தது. அங்கிருந்த கரும்புகளைச் சுவைத்து, "ஆஹா! நல்ல வேட்டை" என நினைத்து, கரும்புகளை உடைத்து வேகமாகச் சாப்பிட்டன.

யானைகள் நடக்கும் சத்தம், கரும்பை உடைக்கும் ஓசை போன்ற சலசலப்புகள் காவலுக்குப் படுத்திருந்த உரிமையாளருக்குக் கேட்டன. இதையடுத்து அந்த நபர் பதறியடித்துக்கொண்டு எழுந்து, கையில் டார்ச் லைட்டை அடித்துப் பார்த்தார். டார்ச் வெளிச்சம் முகத்தில் பட்டதும் யானைகள் கூட்டம் "டேய் செவல, தாவுடா தாவு" என்ற வடிவேலு காமெடியைப் போல் மின்னல் வேகத்தில் ஓட்டம் பிடித்தன.

ஆனால், அங்கிருந்த ஒரு குட்டி யானை, தனது தாய் மற்றும் "சொந்தங்களுடன்" செல்லாமல், அங்கேயே நின்று, உரிமையாளர் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, இன்னும் கரும்பை ருசிக்கலாம் எனத் திட்டமிட்டது. இதற்காக ஒரு மின்கம்பத்தின் பின்னால் பதுங்க முயற்சி செய்தது. தனது உடல் கம்பத்தைவிடப் பெரிதாகவும், தெளிவாகத் தெரிந்தபோதிலும், தன்னை யாரும் பார்க்கவில்லை என்று அது நம்புவதுபோல் காணப்பட்டது. மனிதர்கள் அதன் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சியபோதும், தான் கண்டுபிடிக்கப்படக் கூடாது என்ற நம்பிக்கையில் அது அசைவின்றி நின்றது. இந்தக் குட்டி யானையின் பதுங்கும் முயற்சி வெற்றியடையவில்லை என்றாலும், அதன் செயல் இணையத்திற்கு ஒரு அழகான படத்தைக் கொடுத்துள்ளது