புதுச்சேரி-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெட்டிகள் மாற்றம்

புதுச்சேரி-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெட்டிகள் மாற்றம்
பயணிகளின் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெட்டிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

"பயணிகளின் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெட்டிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்-16855) அனைத்து பெட்டிகளும் வருகிற 17-ந்தேதி முதல் இலகுரக பெட்டியாக இயக்கப்படும். அதே போல, மங்களூருவில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி செல்லும் ரெயிலில் (16856) அனைத்து பெட்டிகளும் 18-ந்தேதியில் இருந்து இலகுரக பெட்டிகளாக இயக்கப்படும்.

புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16857) அனைத்து பெட்டிகளும் வருகிற 19-ந்தேதி முதல் இலகுரக பெட்டியாக இயக்கப்படும். அதேபோல, மங்களூருவில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி செல்லும் ரெயிலில் (16858) அனைத்து பெட்டிகளும் 20-ந்தேதியில் இருந்து இலகுரக பெட்டிகளாக இயக்கப்படும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது