கோவை தியாகி என் ஜி ராமசாமி நினைவு விளையாட்டு கழகத்தின் 29 வது ஆண்டு மாவட்ட அளவிலான விளையாட்டு திருவிழா

கோவை மாவட்டத்தில் உள்ள தியாகி என் ஜி ராமசாமி நினைவு விளையாட்டு கழகமானது இந்த ஆண்டு 29 வது ஆண்டு மாவட்ட அளவிலான விளையாட்டு திருவிழாவை சிறப்பாக ஆரம்பித்துள்ளது.
இந்த விளையாட்டு கழகமானது 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு முன்னாள் மாணவர்களாலும் முன்னாள் விளையாட்டு வீரர்களாகவும் உருவாக்கப்பட்டு இந்த ஆண்டு 29 வது ஆண்டாக சிறப்பாக நடத்தவுள்ளது.
இந்த திருவிழாவில் கோகோ, கபாடி, கையுந்துபந்து, பூப்பந்து, மற்றும் கூடைப்பந்து என ஐந்து விளையாட்டுகளில் 14 பிரிவுகளில் இந்த விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமியுள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் உள்ள 90 பள்ளிகளில் இருந்து விளையாட்டு வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். சுமார் 4000 மாணவ மாணவிகள் இந்த போட்டியிலே கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை மிகவும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விளையாட்டு கழக உறுப்பினர் சுப்பிரமணியம் (கோ- கோ விளையாட்டு வீரர்) இந்திய கோ- கோ அணிக்காக தேர்வு பெற்று ஜனவரி மாதம் புதுடில்லியில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை கோ - கோ போட்டியில் பங்கு பெற்று முதலிடம் பெற்று நமது தமிழகத்திற்கு பெருமை சேர்த்து உள்ளார். தமிழகத்திலிருந்து கலந்து கொண்ட ஒரே வீரர் என்ற பெருமையும் பெற்று இந்த கழகத்திற்கு மேலும் ஒரு சிறப்பை பெற்று தந்துள்ளார்.