திருவாரூர் அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் : மூன்று பேரிடம் போலீஸ் விசாரணை

திருவாரூர் அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் : மூன்று பேரிடம் போலீஸ் விசாரணை
திருவாரூர் அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் : மூன்று பேரிடம் போலீஸ் விசாரணை

திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் மூன்று பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மது போதையில் இருந்த மூன்று பேர் ஞாயிற்றுகிழமை இரவு பள்ளி வளாகத்துக்கு வந்துள்ளனர். அவர் சமையல் அறையின் பூட்டை உடைத்து, அங்கிருந்த சமையல் பாத்திரங்களை உடைத்தெரிந்து, சமையல் பொருட்களையும் கீழே கொட்டியுள்ளனர். தென்னை மரத்தில் உள்ள தேங்காய்களை பறித்து கீழே போட்டுள்ளனர். குடிநீர் தொட்டியின் குழாய்களை சேதப்படுத்தியுள்ளனர். அவர்கள் அங்கிருந்த கீரிப்பிள்ளையை பிடித்து சமைத்து சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களில் ஒருவர், தரைதளத்தில் இருந்த குடிநீர் தொட்டியின் மீது ஏறி மலம் கழித்துள்ளார்.

மது போதையில் இருந்தவர் குடிநீர் தொட்டியில் மலம் கழித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திங்கட்கிழமை காலை பள்ளி ஊழியர்கள் சமையலறை பூட்டு உடைக்கப்பட்டிருப்பதையும் அதனுள்ளே பொருட்கள் சேதப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குடிநீர் தொட்டியின் திறக்கப்பட்டிருப்பதையும் அதில் மனித மலம் இருப்பதையும் கண்டனர்.

இது தொடர்பாக பள்ளி ஆசிரியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். திருவாரூர் மாவட்ட காவல் எஸ்.பி. பள்ளிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விஜயராகவன், செய்தில், விமல்ராஜ் ஆகிய மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.