சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றம்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே ஆர் ஶ்ரீராம் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாகவுள்ள மணீந்திர மோகன் ஶ்ரீவஸ்தவா சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி கே ஆர் ஶ்ரீராம் 2024ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றிருந்தார். அவர் இந்த ஆண்டு செப்டம்பர் 28ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார். உச்சநீதிமன்ற கொலிஜீயம் பரிந்துரையின் அடிப்படையில் இந்த மாற்றம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே ஆர் ஶ்ரீராம் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாகவுள்ள மணீந்திர மோகன் ஶ்ரீவஸ்தவா சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதிபதி கே ஆர் ஶ்ரீராம் 2024ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றிருந்தார். அவர் இந்த ஆண்டு செப்டம்பர் 28ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார்.

உச்சநீதிமன்ற கொலிஜீயம் பரிந்துரையின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி மணீந்திர மோகன் ஶ்ரீவஸ்தவா பிலாஸ்பூரில் 1964-ம் ஆண்டு பிறந்தவர். மத்திய பிரதேச பார் கவுன்சிலில் 1987-ல் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்துக் கொண்டார். மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றங்களில் வழக்காடியவர். 2009-ம் ஆண்டு சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதியானார். அவர் 2021-ம் ஆண்டு முதல் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து வந்துள்ளார். 2024-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.