போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீது இன்று உத்தரவு

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீது இன்று உத்தரவு
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீது இன்று உத்தரவு

சென்னை: ​போதைப்​பொருள் பயன்​படுத்​தி​ய​தாக கைதான நடிகர்​கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோ​ருக்கு ஜாமீன் கோரிய மனு மீது உயர் நீதி​மன்​றம் இன்று உத்​தரவு பிறப்​பிக்​க​வுள்​ளது. போதைப்​பொருள் பயன்​படுத்​தி​ய​தாக கடந்த மாதம் நடிகர்​கள் ஸ்ரீகாந்த் மற்​றும் கிருஷ்ணா ஆகியோரை நுங்​கம்​பாக்​கம் போலீ​ஸார் கைது செய்​தனர். இந்த வழக்​கில் தங்​களுக்கு ஜாமீன் கோரி இரு​வரும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​திருந்​தனர்.

இந்த மனு மீதான விசா​ரணை நீதிபதி எம்​.நிர்​மல்​கு​மார் முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் ஜான் சத்​யன், போதைப்​பொருள் பயன்​படுத்​தி​ய​தாக கைதான பிரதீப்​கு​மார் என்​பவர் அளித்த ஒப்​புதல் வாக்​குமூலத்​தின் அடிப்​படை​யிலேயே ஸ்ரீகாந்தை கைது செய்​துள்​ளனர். அவரிட​மிருந்து எந்​தவொரு போதைப்​பொருளும் கைப்​பற்​றப்​பட​வில்லை என்​றார்.

வாதங்கள் நிறைவு: நடிகர் கிருஷ்ணா தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் இன்​பண்ட் தினேஷ் வாதிடும்​போது, இந்த வழக்​கில் போலீ​ஸார் அனுப்​பிய சம்​மனை ஏற்று விசா​ரணைக்கு ஆஜரான நிலை​யில் கிருஷ்ணாவை கைது செய்​துள்​ளனர். கைதுக்​கான காரணங்​கள் எதை​யும் முறைப்​படி தெரிவிக்​க​வி்ல்​லை. அவரிடம் நடத்​தப்​பட்ட மருத்​துவ பரிசோதனை​யில், போதைப்​பொருள் பயன்​படுத்​தி​யது நிரூபிக்​கப்​பட​வில்லை என்​றார்.

அதற்கு அரசு தரப்​பில் ஆஜரான குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஆர்.வினோத்​ராஜா, நுங்​கம்​பாக்​கம் மது​பான பாரில் நடந்த பிரச்​சினை​யில் கொலை முயற்சி வழக்​கில் கைதான அதி​முக முன்​னாள் நிர்​வாகி​யான பிர​சாத்​திடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் அவருக்​கும் மற்​றவர்​களுக்​கும் இருந்த போதைப்​பொருள் பழக்​கம் தெரிய​வந்​தது. அவர் அளித்த வாக்​குமூலத்​தின் அடிப்​படை​யில் பிர​வீன்​கு​மார் கைது செய்​யப்​பட்​டார்.

பிர​வீன்​கு​மார் அளித்த வாக்​கு மூலத்​தின்​படி ஸ்ரீகாந்த் கடந்த ஜூன் 23-ம் தேதி​யும் கிருஷ்ணா ஜூன் 26-ம் தேதி​யும் கைது செய்யப்பட்​டனர் என்​றார். அனைத்து தரப்பு வாதங்​களும் நிறைவடைந்த நிலை​யில் இந்த வழக்​கில் இன்று (ஜூலை 8) உத்​தரவு பிறப்​பிக்கப்​படும் என நீதிப​தி எம்​.நிர்​மல்​கு​மார்​ அறி​வித்​துள்ளார்