இந்த்ய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இன்று பூமி திரும்புகிறார்.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இன்று பூமி திரும்புகிறார். அவர் உள்ளிட்டோர் சென்ற Ax-4 க்ரூ டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விடுபட்டு பூமிக்கு திரும்புகிறது. ஜூன் 26ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த குழுவினர், இன்று பிற்பகல் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை ஒட்டியுள்ள கரை பகுதியில் வந்தடைகின்றனர் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த நாட்களில் சுபான்ஷு சுக்லா நீண்டகால விண்வெளிப் பயணங்களால் ஏற்படும் தசை சீரழிவு, அல்ட்ராசவுண்ட் மூலம் பூமியின் ஈர்ப்பு இல்லாத நிலையில் மூளை இரத்த ஓட்டம், எதிர்கால ஆழ்விண்வெளிப் பயணங்களுக்கான நிலையான உணவு மூலங்களை ஆராயும் மைக்ரோ ஆல்கே மாதிரிகள், எடையற்ற நிலையில் வளரும் உணவாக உட்கொள்ளக்கூடிய மூன்று வகை மைக்ரோ ஆல்கே இனங்களின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விசயங்களை ஆய்வு செய்துள்ளார்.
Ax-4 க்ரூ டிராகன் விண்கலம் தரையிறக்கத்திற்கு சுமார் 22-24 மணி நேரத்திற்கு முன்பு ISS-லிருந்து விடுபட்டது. பிரிந்த பிறகு, மெல்ல மெல்ல சுற்றுப்பாதை தாழ்வு எரிப்புகளை செயல்படுத்தி அதன் சுற்றுப்பாதையை படிப்படியாக தாழ்த்தியது. கணக்கிடப்பட்ட தரையிறக்கத்திற்கு 30-60 நிமிடங்களுக்கு முன்பு டி-ஆர்பிட் எரிப்பு மூலம் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும்.
இந்த சமயத்தில் உராய்வு காரணமாக, விண்கலத்தைச் சுற்றியுள்ள வெப்பநிலை 1,900°C வரை உயரும். சிறப்பாக தயாரிக்கப்பட்ட வெப்ப கேடயம் இந்தக் கட்டத்தில் குழுவைப் பாதுகாக்கும். வளிமண்டலத்தில் நுழைந்த பிறகு, 5.5 கிமீ உயரத்தில் பாராசூட்கள் விரிக்கப்படும், கலிபோர்னியா ஒட்டிய கடலில் பாதுகாப்பாக நீரிறக்கம் ஆகும்.
1984-ம் ஆண்டு இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மா விண்வெளி சென்ற வந்த பிறகு, விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது இந்தியர் சுபான்ஷு சுக்லா ஆவார்