மதுரை HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. மிஸ் பண்ணாதீங்க

மதுரை HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. மிஸ் பண்ணாதீங்க
மிஸ் பண்ணாதீங்க...

மதுரை: மதுரயைில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்? அவர்களுக்கான தகுதிகள்? பற்றிய விவரம் வருமாறு..

நம் நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களில் எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிகத்தை எடுத்து கொண்டால்சென்னை, மதுரையில் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மதுரையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி மதுரை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது சீனியர் ஜாவா சாப்ட்வேர் இன்ஜினியர் (Senior Java Software Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதாவது DevOps மற்றும் React.js உடனான ஃபுல் ஸ்டாக் ஜாவா டெவலப்பர் பணி இதுவாகும். இந்த பணிக்கு React.js அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பேக்எண்ட் மற்றும்ஃப்ரண்ட்எண்ட் டெக்ஜாலஜி உள்பட ஃபுல் ஸ்டாக் ஜாவா டெவலப்மென்ட்டில் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும்.

Data Management மற்றும் Integration உள்ளிட்டவற்றை பற்றிய புரிதல் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர DevOps, React.js அல்லது ஜாவா டெக்னாலஜிஸ் தொடர்பான சான்றிதழ்களை வைத்திருப்பது பிளஸ் பாயிண்ட்டாகும்.

தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் விண்ணப்பத்துக்கான காலஅவகாசம் எப்போது வேண்டுமானாலும் முடியலாம்..

இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் பணி இருக்கும். 2 நாட்கள் விடுமுறையாகும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here