35 வயதிலேயே 2 அபார்ட்மெண்டுக்கு ஓனர்.. கடன் இல்லாத வாழ்க்கை.. ரகசியத்தை வெளியிட்ட டெக்கி

பெங்களூரு: இந்தியாவில் தற்போது கடன் வாங்கி ஒரு பொருளை வாங்குவது என்பது மிகவும் எளிதாகி விட்டது. குறிப்பாக வீடு வாங்க கடன் வாங்கும் சூழலில் தான் பெரும்பாலானவர்கள் இருக்கிறோம். பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் சொந்தமாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வாங்க வேண்டும் என்றால் கூட குறைந்தது 1.5 கோடி ரூபாய் பணம் தேவைப்படுகிறது.
கடன் இல்லாத வாழ்க்கை: வீட்டுக் கடன் வாங்கக்கூடிய நபர்கள் அடுத்த 20 ஆண்டு காலத்திற்கு இந்த கடனுக்குள்ளேயே சிக்கி தவிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் தான் ஒரு டெக்கி 12 ஆண்டுகளாக தான் பின்பற்றிய நிதி சார்ந்த வழிமுறைகளை ரெடிட் தளத்தில் பதிவு செய்துள்ளார். 7000 ரூபாய் தான் என்னுடைய முதல் சம்பளம் என்றும் தற்போது எனக்கு 35 வயது ஆகிறது நான் கடனே இல்லாமல் இருக்கிறேன் எனக்கு சொந்தமாக பெங்களூருவிலும் நொய்டாவிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கின்றன என அவர் தெரிவித்திருக்கிறார்.
ரகசியத்தை வெளியிட்டு பதிவு: தான் என்னென்ன வழிமுறைகளை பின்பற்றினேன் என்பதை அவர் தன்னுடைய ரெடிட் பதிவில் விளக்கமாக தெரிவித்து இருக்கிறார். ஒவ்வொரு இளைஞரும் எப்படி பணத்தை மேலாண்மை செய்ய வேண்டும் என்பதை பிராக்டிக்கலான முறையில் அவர் விவரித்திருக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு தான் முதன்முதலில் வேலைக்கு சேர்ந்ததாக தெரிவித்திருக்கும் அவர் அப்பொழுது என்னுடைய மாத சம்பளம் 7000 ரூபாய் தான் எனக் கூறியிருக்கிறர்..
7,000 தான் முதல் சம்பளம்: நான் பெரிய கல்லூரியில் சென்று பட்டப்படிப்பை முடிக்கவில்லை ,வெளிநாட்டு வேலையும் என்னிடம் கிடையாது ஆனால் எனக்கு கிடைத்த வேலை எனக்கு கிடைத்த சம்பளம் ஆகியவற்றை கொண்டு ஒழுக்கமான முறையில் பணத்தை மேலாண்மை செய்தது தான் என்னுடைய இந்த வெற்றிக்கு காரணம் என அவர் கூறியிருக்கிறார். 2013 ஆம் ஆண்டு நொய்டாவில் முதன்முறையாக 7000 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்ததாக கூறி இருக்கும் அவர் அதன் பின்னர் அங்கிருந்து பெங்களூருக்கு சென்று தொழில்நுட்ப படிப்பை முடித்திருக்கிறார் . இதனை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களில் இவர் வேலைக்கு விண்ணப்பம் செய்து இருக்கிறார் . பெரும்பாலான இடங்களில் இவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்து நல்ல நிறுவனத்தில் வேலை பெற்றாராம்.
இரண்டு முக்கிய அறிவுரை: அந்த சமயத்தில் இவருக்கு கிடைத்த இரண்டு அறிவுரைகள் தான் தற்போது கடனே இல்லாத நபராக இவரை மாற்றி இருக்கிறதாம். ஒன்று மாதந்தோறும் செலவிட வேண்டிய வீட்டு வாடகை உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளில் சேமிக்க வேண்டும் , மற்றொன்று கிரெடிட் கார்டுகளை வாங்கக்கூடாது இந்த இரண்டு அறிவுரையும் தவறாமல் தன் பின்பற்றுவதாக கூறியிருக்கிறார். இது தவிர தன்னுடைய வருமானம் எவ்வளவு அதில் தான் எவ்வளவு செலவு செய்கிறேன் அதில் எவ்வளவு தொகையை தேவையில்லாமல் செலவு செய்கிறேன் என்பதை குறிப்பாக எழுதி வைத்து ஆய்வு செய்வாராம் . அடுத்தடுத்த மாதங்களில் அந்த தேவையற்ற செலவுகளை குறைத்து விடுவாராம்.
.7,000 தான் முதல் சம்பளம்: நான் பெரிய கல்லூரியில் சென்று பட்டப்படிப்பை முடிக்கவில்லை ,வெளிநாட்டு வேலையும் என்னிடம் கிடையாது ஆனால் எனக்கு கிடைத்த வேலை எனக்கு கிடைத்த சம்பளம் ஆகியவற்றை கொண்டு ஒழுக்கமான முறையில் பணத்தை மேலாண்மை செய்தது தான் என்னுடைய இந்த வெற்றிக்கு காரணம் என அவர் கூறியிருக்கிறார். 2013 ஆம் ஆண்டு நொய்டாவில் முதன்முறையாக 7000 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்ததாக கூறி இருக்கும் அவர் அதன் பின்னர் அங்கிருந்து பெங்களூருக்கு சென்று தொழில்நுட்ப படிப்பை முடித்திருக்கிறார் . இதனை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களில் இவர் வேலைக்கு விண்ணப்பம் செய்து இருக்கிறார் . பெரும்பாலான இடங்களில் இவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்து நல்ல நிறுவனத்தில் வேலை பெற்றாராம்..
இரண்டு முக்கிய அறிவுரை: அந்த சமயத்தில் இவருக்கு கிடைத்த இரண்டு அறிவுரைகள் தான் தற்போது கடனே இல்லாத நபராக இவரை மாற்றி இருக்கிறதாம். ஒன்று மாதந்தோறும் செலவிட வேண்டிய வீட்டு வாடகை உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளில் சேமிக்க வேண்டும் , மற்றொன்று கிரெடிட் கார்டுகளை வாங்கக்கூடாது இந்த இரண்டு அறிவுரையும் தவறாமல் தன் பின்பற்றுவதாக கூறியிருக்கிறார். இது தவிர தன்னுடைய வருமானம் எவ்வளவு அதில் தான் எவ்வளவு செலவு செய்கிறேன் அதில் எவ்வளவு தொகையை தேவையில்லாமல் செலவு செய்கிறேன் என்பதை குறிப்பாக எழுதி வைத்து ஆய்வு செய்வாராம் . அடுத்தடுத்த மாதங்களில் அந்த தேவையற்ற செலவுகளை குறைத்து விடுவாராம்.
முதலீடு: தன்னுடைய சேமிப்பு தொகையை வங்கியில் வைக்காமல் முதலீடு செய்திருக்கிறார் முதலில் எஃப்டி-இல் முதலீடு செய்த அவருக்கு 8.75% லாபம் கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்ய தொடங்கியிருக்கிறார் . எடுத்த உடனே தன்னுடைய முதலீடுகள் தனக்கு லாபம் தரவில்லை என்றும் படிப்படியாக தான் கற்றுக்கொண்டு முதலீட்டை மேற்கொண்டேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
முதல் வீடு: மாதந்தோறும் வருமானத்தையும் ஒரு கணிசமான தொகையை முதலில் சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு என எடுத்து வைத்துவிட்டு மீதமுள்ள தொகையை தான் பயன்படுத்துவேன் என கூறியிருக்கும் அவர் எந்த ஒரு போனஸ் தொகை வந்தாலும் அதனை உடனடியாக ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்து விடுவேன் என்கிறார். 2018 ஆம் ஆண்டு நொய்டாவில் முதன்முறையாக தான் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியதாகவும் அப்போது 5 லட்சம் ரூபாய் டவுன்பேமெண்ட் செய்து விட்டு மீதமுள்ள 55 லட்சம் ரூபாய்க்கு கடன் வாங்கினாராம்
கிரெடிட் கார்டுக்கு நோ: தன்னுடைய வருமானத்தில் எப்பொழுதுமே தேவையற்ற செலவுகளை செய்ததில்லை எனக் கூறும் அவர் அதே சமயத்தில் குடும்பத்தினர் உடன் வெளியே செல்வது என வாழ்க்கையும் அனுபவித்ததாக கூறியிருக்கிறார். கிரெடிட் கார்டு பயன்படுத்தாமல் இருந்தது தனக்கு மிகப்பெரிய அளவில் சேமிப்பு ஏற்படுத்தி தந்ததாக கூறியிருக்கிறார். இது தவிர தான் எதற்கெல்லாம் பணத்தை செலவிடுகிறேன் என மாதம்தோறும் ஆய்வு செய்ததன் மூலம் தேவையற்ற செலவுகளை குறைக்க முடிந்தது என்றும் தெரிவித்துள்ளார்
எது முக்கியம்?: ஆண்டுக்கு 14 இஎம்ஐ என்ற முறையில் இரண்டு இஎம்ஐ கூடுதலாக செலுத்தியதன் மூலம் இவருடைய கடன் செலுத்தும் காலமும் மொத்த வட்டி சுமையும் குறைந்து இருக்கிறது. போனஸ் தொகைகளை ப்ரீ லோன் பேமெண்டுக்கு பயன்படுத்தியதன் மூலம் முன்கூட்டியே வீட்டு கடன்களை அடைக்க முடிந்தது என தெரிவிக்கிறார். நாம் வாங்கும் சம்பளம், நம் படிப்பு, நம் வேலை இவற்றை எல்லாம் விட பணத்தை நாம் எப்படி மேலாண்மை செய்கிறோம் என்பதே முக்கியம் என கூறும் இவர் 35 வயதில் கடன் இல்லாத நபராக பெருமையுடன் நிற்கிறேன் என தெரிவித்துள்ளார்.