1 லட்சம் லஞ்சம் வாங்கிய அலுவலர், புரோக்கருக்கு 'கம்பி'

1 லட்சம் லஞ்சம் வாங்கிய அலுவலர், புரோக்கருக்கு 'கம்பி'
சேலம், ஜாரி கொண்டலாம்பட்டி பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில், மின் பணிக்கு ஒப்பந்தம்..

அஸ்தம்பட்டி : சேலம், ஜாரி கொண்டலாம்பட்டி பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில், மின் பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. அதே பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் சண்முகம், 47, என்பவர், 10 லட்சம் ரூபாய் ஒப்பந்த பணிக்கு, சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்...

அனுமதி வழங்க கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் முதுநிலை வரைவு அலுவலர் ரவி, 55, என்பவர், 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். சண்முகம், சேலம் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் அளித்தார்..

போலீசார் அறிவுறுத்தல்படி, அஸ்தம்பட்டி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்துக்கு சென்ற சண்முகம், ரசாயனம் தடவிய, 1 லட்சம் ரூபாயை, மிட்டாபுதுாரை சேர்ந்த புரோக்கர் பிரகாஷ், 45, என்பவரிடம் நேற்று வழங்கினார்.

அவர், பணத்தை வாங்கி, ரவியிடம் வழங்கினார். அப்போது, மறைந்திருந்த போலீசார், ரவி, பிரகாஷ் இருவரையும் கையும், களவுமாக கைது செய்தனர்...