சர்வேயர்கள் ஆரம்பிச்சிட்டாங்க.. நில அளவை அலுவலர்கள் சொல்வதென்ன? மதுரை தாலுகா ஆபீஸ்ல ஒரு வேலையும் ஓடல

சர்வேயர்கள் ஆரம்பிச்சிட்டாங்க.. நில அளவை அலுவலர்கள் சொல்வதென்ன? மதுரை தாலுகா ஆபீஸ்ல ஒரு வேலையும் ஓடல
மதுரை தாலுகா ஆபீஸ்ல ஒரு வேலையும் ஓடல

மதுரை: நியாயமான கோரிக்கை என்றால் தாசில்தார் குறிப்பிட்ட கால வரம்புக்குள் பரிசீலனை செய்ய வேண்டும். நியாயமான கோரிக்கை மனுக்களை கால வரம்பிற்குள் பரிசீலிக்க வேண்டும் என்பது தாசில்தாரரின் கடமை என்று ஐகோர்ட் கிளை ஏற்கனவே அறிவுறுத்திய நிலையில், அதனை தாசில்தார்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். இந்நிலையில், தங்களுடைய கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள் மதுரை தாசில்தார்கள். என்ன நடந்த

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் சர்வேயர்கள் அரசுக்கு முக்கிய கோரிக்கையை வலியுறுத்தியிருந்தனர்

அதாவது, பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலங்களை, டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யும் திட்டம் துவங்கப்பட்டதால், இதற்கான பணிகளை, கிராம நிர்வாக அலுவலர் வழியாக மேற்கொள்ள, தமிழக அரசு முடிவு செய்தது..

விஏஓக்கள் கோரிக்கை

ஆனால், இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டுமானால், தங்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை, விஏஓக்கள் ஏற்கனவே முன்வைத்து வருகிறார்கள்.

நில அளவைக்கு தேவையான உபகரணங்களை வழங்குவதற்கும், ஒரு பதிவுக்கு ர.10 வழங்குவதற்கும் அதிகாரிகள் தரப்பில் சம்மதம் சொன்னாலும், உரிய நேரத்தில் மதிப்பூதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு கிளம்பியது. எனவே, மதிப்பூதியம் வழங்காததால், விஏஓ-க்கள் அந்த பணிகளை புறக்கணித்திருந்தனர்.

பேச்சுவார்த்தை தோல்வி

இது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை.. இதன்காரணமாக டிஜிட்டல் நில அளவை பணியை முற்றிலுமாக புறக்கணிப்பதாக, அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் அதிரடியாக அறிவித்துவிட்டார்கள்.

அதுமட்டுமல்ல, தினமும் அலுவலகம் வர வேண்டும் என்ற தாசில்தார்களின் உத்தரவுக்கு, நில அளவை களப்பணியாளர்கள் வன்மையான கண்டனத்தை பதிவு செய்து, சென்னை மாவட்ட செயலர் பார்த்திபன், சென்னை கலெக்டருக்கு மனு ஒன்றையும் தந்திருந்தார்கள்..

விரைந்து பட்டா

அதில், விரைந்து பட்டா வழங்கும் திட்டங்களில், நில அளவை களப் பணியாளர்கள், காலம் நேரம் பாராமல் பணி செய்துவரும் நிலையில், தாசில்தார்களின் ஒருதலைபட்சமான உத்தரவுகள், களப்பணியாளர்களிடம் அதிருப்தியை தந்துள்ளது.. எனவே, தாசில்தார்களின் உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இப்படி நிர்வாகத்துக்குள் நிலவும் விவகாரங்களில் ஏற்கனவே சிக்கல்கள், சலசலப்புகள் நிலவிவரும் நிலையில், தற்போது 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சர்வேயர்கள் போராட்டத்தை துவங்கியிருக்கிறார்கள்.

களப்பணியாளர் பணிச்சுமை

களப்பணியாளர் பணிச்சுமையை குறைக்க வேண்டும், தரம் இறக்கிய குறுவட்ட அளவர் பதவியை மீண்டும் வழங்க வேண்டும், நிலஅளவைத் துறையில் காலியிடங்களை நிரப்ப வேண்டும், துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை நீண்ட காலமாகவே வலியுறுத்தி கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், சர்வேயர்களின் கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில், மதுரையில் தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் தங்களது 2 நாள் போராட்டத்தை துவக்கி உள்ளனர்..

தாசில்தார் அலுவலகம்

நேற்று முதல் 2 நாள் வேலை நிறுத்தம் ஆரம்பமானது.. கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாநில செயலாளர் முத்துமுனியாண்டி, மாவட்டச் செயலாளர் ரகுபதி, துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த சங்கத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.. இதனால், மாவட்டத்தில் 11 தாலுகாக்களிலும் பலரும் வேலையில் ஈடுபடவில்லை..

இதன் காரணமாக, விண்ணப்பங்களுடன் வந்த பொதுமக்கள், தாசில்தார்கள் இல்லாததால், காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது.. இதனால், அவர்களின் பணிகளும் பாதிக்கப்பட்டன. இன்று 2வது நாளாகவும் போராட்டத்தை நடத்தி கொண்டிருப்பதால், மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.