மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்?

மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட். எஸ்.பி. அலுவலகத்தினர் மீது குற்றம் சாட்டியதால், தஞ்சை டிஐஜி விசாரணை நடத்தி, குழப்பம் ஏற்படுத்தியதாக அறிக்கை.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சுந்தரேசன்
மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் தமிழக உத்தரவு பிறப்பித்துள்ளது..
தன்னுடைய வாகனத்தை எஸ்.பி. அலுவலகத்தினர் வாங்கிக் கொண்டதாக மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் பேட்டி அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும் எந்த கவலையும் இல்லை என்று தெரிவித்து இருந்தார். டிஎஸ்பி கார் வாகனம் பறிக்க்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்தே பணிக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த விவகாரம் தொடர்பாக மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேரிடம் தஞ்சை மண்டல டிஐஜி ஜியாவுல் ஹக் விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பான அறிக்கையில், டிஎஸ்பி சுந்தரேசன் காவல்துறையில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது...
டிஎஸ்பி சுந்தரேசனின் நடவடிக்கை காவல்துறைக்கு விசுவாசமானதாக இல்லை என்றும், எஸ்பி சுந்தரேசன் மாவட்ட எஸ்.பி.யின் உத்தரவை பல முறை மதிக்காமல் நடந்திருப்பதாகவும் டிஜஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உயர் அதிகாரிகளின் அனுமதி பெறாமலே செய்தியாளர்களை சந்தித்து, உயர் அதிகாரிகள் மீது ஆதாரமற்ற அவதூறுகளை தெரிவித்ததாகவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது..
இதையடுத்து மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய ஐஜி-க்கு டிஐஜிக்கு பரிந்துரை அளித்திருப்பதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பென்ட் செய்யபட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது ஊழியர்களுக்கான விதிகளை மீறி ஒழுங்கின செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...