பென்ஷனில் ரூ.3000 தரும் இ-ஷ்ரம் கார்டு திட்டம்.. மத்திய அரசு இஷ்ரம் அட்டைக்கு மாதம் ₹1000 கன்பார்ம்

சென்னை: பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் என்று என அனைத்து தரப்பினருமே பலன்தரக்கூடிய வகையில், மத்திய அரசு புதுபுது திட்டங்களை அறிமுகப்படுத்தியிருப்பதுடன், அவைகளை திறன்பட செயல்படுத்தியும் வருகிறது... அந்தவகையில், தொழிலாளர்களுக்கும்கூட பயனுள்ள திட்டங்களை கொண்டுவந்துள்ளது.. அதில், ஒன்றுதான் இ-ஷ்ரம் திட்டம்.. அடல் பென்சன் யோஜனா உள்ளிட்ட அரசின் திட்டங்களை பெற்றுக் கொள்வதற்கு உதவும் இந்த இ-ஷ்ரம் திட்டம் பற்றி தெரியுமா? இதன் பலன்கள் என்னென்ன? என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.
நாட்டு மக்களின் வளர்ச்சியில் மத்திய அரசு பெருத்த அக்கறையை செலுத்தி வருகிறது.. அந்தவகையில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்காகவே, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்த பல திட்டங்களில் கவனிக்கப்பட வேண்டியது இ-ஷ்ரம் கார்டு திட்டமாகும்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த தொழிலாளர்களுக்காகவே, மாத மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.. எனினும், இ-ஷ்ரம் கார்டு வைத்திருப்போர்கள் மட்டுமே இதன் பலனை நேரடியாக பெற முடியும்..
புலம்பெயர் தொழிலாளர்கள்
இந்த தொழிலாளர்களின் அட்டையில், 12 இலக்க எண்கள் பதிவாகியிருக்கும்.. இவர்களுக்காகவே இ-ஷ்ரம் (e-Shram) போர்ட்டலும் செயல்பட்டு வருகிறது.. இது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் துவக்கி வைக்கப்பட்டது...
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வீட்டு பணியாளர்கள் உட்பட பிற தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் அட்டை கார்டு மூலம் சலுகைகள் தரப்பட்டு வருகின்றன..எனவே இ-ஷ்ரம் அட்டையை வைத்திருப்போருக்கு மட்டும், மாத மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.. மேலும் அவர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை மருத்துவ காப்பீடும் உண்டு..
அதுமட்டுமல்ல, இந்த தொழிலாளர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை விபத்து காப்பீடு வசதி கிடைக்கும். விபத்தில் தொழிலாளி இறந்துவிட்டால், அவரது குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். ஒருவேளை தொழிலாளி ஊனமுற்றால் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்..
இ ஷ்ரம் திட்டத்தில், பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பயனாளிக்கு அடல் பென்சன் யோஜனா உள்ளிட்ட அரசின் திட்டங்களும் உண்டு.. 60 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் மாதம் 3,000 ரூபாய் பென்ஷனை எளிதாக பெற முடியும்.. சொந்தமாக வீடு கட்ட நிதியுதவியும் வழங்கப்படுகிறது..தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது.. அதேபோல அவர்களது மகள்களின் திருமணம் முதல் மருத்துவ சிகிச்சைகள் வரைக்கும் இந்த திட்டத்தின் பலன்களை பெறலாம்.
லேபர் கார்டு பெற தகுதிகள்
அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்கள் இந்த இ-ஷ்ரம் அட்டையினை பெற விண்ணப்பிக்கலாம்.. ஆனால், அத்தொழிலாளி, இந்திய பிரஜையாக இருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும்....இ-ஷ்ரம் லேபர் கார்டுக்கு, விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பர், வங்கி பாஸ்புக் போன்றவை ஆவணங்களாக தேவைப்படும்...
எப்படி பதிவு செய்வது
எனவே, இஷ்ரம் கார்டுக்கு பரிந்துரைக்கப்பட்ட தகுதியுள்ள தொழிலாளர்கள் e-Shram போர்ட்டலில் பதிவு செய்து, கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு eshram.gov.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று பதிய வேண்டும்.. இந்த வெப்சைட்டிலிருந்து அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து, விவரத்தை பூர்த்தி செய்துவிட்டு, அருகிலுள்ள தொழிலாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து விடலாம்.ஆன்லைனில் பதிவு செய்ய முடியாமல் போனாலும், அரசு இ-சேவை மையம் அல்லது CSC மையத்திற்கு நேரடியாகவே சென்று பதிவு செய்யலாம்...