சக்கரத்தில் நாய் சிக்கியதால் சென்னை வந்தே பாரத் ரெயில் நடுவழியில் நிறுத்தம்

சென்னை ரெயில்வே நிபுணர்களின் ஆலோசனை பெற்று ஊழியர்கள் நட்டை மாற்றி சரி செய்தனர்.
30 நிமிடம் தாமதமாக ரெயில் சென்னை புறப்பட்டு சென்றது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்தே பாரத் ரெயில் வந்து கொண்டிருந்தது.
சிராலா ரெயில் நிலையத்தை கடந்து வந்தபோது திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்தது.ரெயில் மோதியதில் நாய் சக்கரத்தில் சிக்கியது.
இதனால் வந்தே பாரத் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது சக்கரத்தில் உள்ள நட்டு உடைந்து சேதம் அடைந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சென்னை ரெயில்வே நிபுணர்களின் ஆலோசனை பெற்று ஊழியர்கள் நட்டை மாற்றி சரி செய்தனர்.
பின்னர் 30 நிமிடம் தாமதமாக ரெயில் சென்னை புறப்பட்டு சென்றது