சீனா என்ன பெரிய சீனா.. உலக தங்க மார்க்கெட்டையே மொத்தமாக அதிர வைத்த இந்தியா.. ஸ்மார்ட்டான மூவ்

சீனா என்ன பெரிய சீனா.. உலக தங்க மார்க்கெட்டையே மொத்தமாக அதிர வைத்த இந்தியா.. ஸ்மார்ட்டான மூவ்
சீனா என்ன பெரிய சீனா.. உலக தங்க மார்க்கெட்டையே மொத்தமாக

சென்னை: உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் 2024 ஆம் ஆண்டில் 84 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை வாங்கியுள்ளன. அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் மற்றும் டாலரின் நிலையற்ற தன்மை காரணமாக தங்கம் மத்திய வங்கிகளுக்கு முக்கியமான முதலீடாக மாறியுள்ளது.

டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் ஜூலை 2025 அறிக்கையின்படி, உலக தங்கச் சந்தையில் இந்தியாவின் பங்கு 15 சதவீதமாக உள்ளது, இதன் மதிப்பு சுமார் 23 டிரில்லியன் டாலர்கள் ஆகும். தற்போதுள்ள உலக அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 12.5 டிரில்லியன் டாலர்கள் என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதுவரை வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தில் 65 சதவீதம் நகைகள் வடிவில் உள்ளது. இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்கத் தொடங்கி உள்ளது. உலக அளவில் பொருளாதாரம் மோசமாகி வருவதால், சர்வதேச பொருளாதாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத சூழல் நிலவி வருகிறது. பல நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கத் தொடங்கி உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில், ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பு 35% அதிகரித்து, 2020 நிதியாண்டில் 653 டன்னிலிருந்து மார்ச் 2025 இல் 880 டன்னாக உயர்ந்துள்ளது.

தங்க இருப்பு: இந்தியாவின் நிலை

உலக தங்க தரவரிசையில் இந்தியாவும் உயர்ந்துள்ளது. தங்க இருப்பு அடிப்படையில் உலகில் ஏழாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2015 இல் பத்தாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. உலக தங்க கவுன்சிலின் கூற்றுப்படி, இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி இருப்பில் தங்கம் இப்போது 11.35% ஆகும், இது 2021 இல் 6.86% ஆக இருந்தது. இந்தியாவின் வேகமான வளர்ச்சி சீனாவிற்கு சிக்கலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன .

ரிசர்வ் வங்கி தங்கம் வாங்குவது ஏன்?

சமீபத்திய ஆண்டுகளில் டாலர் நிலையற்றதாக உள்ளது, மேலும் தங்கம் மிகவும் நிலையான பொருளாதாரத்தை வழங்குகிறது. அமெரிக்க டாலர் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் இருப்பு நாணயமாக இருந்தாலும், அதன் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக டாலரை நம்ப முடியாத நிலை உள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக டாலர் இருப்புக்களை வைத்திருக்கும் மத்திய வங்கிகள் கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றன.

பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தால் பணத்தின் மதிப்புகள் சரியும். ஆனால் தங்கத்தின் மதிப்பு உயரும். பொருளாதார சரிவின்போது தங்கத்தின் மதிப்பே ஒரு நாட்டைக் காக்கும். இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்கத் தொடங்கி உள்ளது.

இந்தியாவின் ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்கி குவிப்பதில் தீவிரமாக உள்ளது. தங்கத்தின் கையிருப்பு மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்ட தரவுகளின்படி, அதன் தங்கத்தின் மதிப்பு ஒரே வாரத்தில் ரூ.11,986 கோடி உயர்ந்துள்ளது. இந்த உயர்வின் மூலம், ரிசர்வ் வங்கியின் மொத்த தங்க கையிருப்பு மதிப்பு ரூ.6,88,496 கோடியாக உயர்ந்துள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது

முன்னாள் அதிபர் டிரம்ப் ஆட்சியில் பொருளாதார சரிவு ஏற்பட்ட காலகட்டத்தில் ரிசர்வ் வங்கியின் தங்கம் மதிப்பு அதிகரித்தது. உலக அளவில் பல மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்கும் நிலையில், இந்தியாவின் ரிசர்வ் வங்கியும் தங்கத்தை வாங்கி குவிக்கத் தொடங்கி உள்ளது

வர்த்தக பற்றாக்குறை குறையுமா?

அமெரிக்கா இந்தியா இடையிலான வர்த்தக பற்றாக்குறையை போக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவிலிருந்து தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் உள்ளிட்ட உயர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா பரிசீலித்து வருகிறது. வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல் 2024-பிப்ரவரி 2025) இந்தியா 76.37 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது அதே சமயம் $41.62 பில்லியன் பொருட்களை இறக்குமதி செய்தது, இதன் விளைவாக $34.75 பில்லியன் வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டது

அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான வழிகளில் ஒன்றாக Trade diversification எனப்படும் வர்த்தகப் பல்வகைமை முறையை கையாள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் நகைகளை இறக்குமதி செய்ய உள்ளனர். தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் உற்பத்தியில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. இவற்றில் கணிசமான அளவை அமெரிக்காவிலிருந்து இந்தியா எளிதாக பெற முடியும். இதன் மூலம் தங்கம், வெள்ளியின் கையிருப்பு இந்தியாவில் அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல் 2024-பிப்ரவரி 2025) இந்தியாவின் தங்கம் மற்றும் வெள்ளி உட்பட விலைமதிப்பற்ற உலோகங்களின் மொத்த இறக்குமதி 74 பில்லியன் டாலர்களைத் தாண்டி உள்ளது.

2023-24ல் இந்தியா $74.81 பில்லியன் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை இறக்குமதி செய்தது. இதில் சுமார் 5 பில்லியன் டாலர்கள் இறக்குமதிகள் அமெரிக்காவிலிருந்து வந்தவை. இதை இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு உயர்த்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறையைச் குறைக்கும் முயற்சியில், இந்திய ரிசர்வ் வங்கியின் தங்கம் வாங்கும் போக்கு நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.