பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டால் ஏற்பாடு செய்வோம்: நயினார் நாகேந்திரன்

பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டால் ஏற்பாடு செய்வோம்: நயினார் நாகேந்திரன்
பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டால் ஏற்பாடு செய்வோம்: நயினார் நாகேந்திரன்

மதுரை / தென்காசி: பிரதமர் மோடி மீண்​டும் தமிழகம் வரும்​போது, அவரை சந்​திக்க ஓபிஎஸ் நேரம் கேட்​டால் கட்​டா​யம் ஏற்​பாடு செய்​வோம் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். மதுரை சிந்​தாமணி பகு​தி​யில் பாஜக தென் மாவட்​டப் பொறுப்​பாளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

இதில் பங்​கேற்ற நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் பாஜக கூட்​ட​ணியி​லிருந்து வெளி​யேறியது எதற்​காக என்று தெரிய​வில்​லை. அவர் அறி​விப்பை வெளி​யிடு​வதற்கு முன்​புவரை, செல்​போன் மூல​மாக பேசிக் கொண்​டு​தான் இருந்​தேன். அவர் வில​கியதற்கு என்ன காரணம் என்று தெரிய​வில்​லை.

மோடியை சந்​திக்க அனு​மதி தரவில்லை என்​ப​தால்​தான், கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேறிய​தாக அவர் கூறு​வது பற்றி எனக்​குத் தெரி​யாது. என்​னிடம் சொல்​லி​யிருந்​தால், நான் அனு​மதி வாங்​கித் தந்​திருப்​பேன். பழனி​சாமி கொடுத்த அழுத்​தத்​தால்​தான் ஓபிஎஸ் வெளி​யேறி​னார் என்று கூறு​வ​தில் உண்​மை​யில்​லை. அவர் வெளி​யேறியது கூட்​ட​ணிக்கு பலவீனமா என்​பது தேர்​தலின்​போது​தான் தெரிய​வரும்.

தமிழக முதல்​வரை ஓபிஎஸ் சந்​தித்​தது குறித்து எனக்கு எது​வும் தெரி​யாது. சொந்த விஷ​யத்​துக்​காக​வும், தொகுதி பிரச்​சினைக்​காக​வும் அவர் சந்​தித்​திருக்​கலாம். நான்​கூட சொந்த பிரச்​சினைக்​காக முதல்​வரை சந்​திக்​கலாம். பிரதமர் மோடி மீண்​டும் தமிழகம் வரும்​போது, அவரை சந்​திக்க ஓபிஎஸ் நேரம் கேட்​டால், கட்​டா​யம் பெற்​றுத் தரு​வோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

அவசரம் நல்​லதல்​ல... முன்​னாள் மத்​திய அமைச்​சர் பொன்.ராதாகிருஷ்ணன், தென்​காசி மாவட்​டம் சங்​கரன்​கோ​விலில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் நிதான​மானவர். எந்த விஷ​யத்​தை​யும் ஆழமாக சிந்​தித்து முடிவு செய்​வார். ஆனால், தற்​போது அவசரப்​பட்டு முடிவு எடுத்​தது சரியல்ல.

சாதிய கொலைகள் கண்​டிக்​கத்​தக்​கவை. மண்​ணில் வாழ்​வதற்கு அரு​கதையற்​றவர்​கள்​தான் இது​போன்ற கொலைகளை செய்​வார்​கள். பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​துக்கு நீதி கிடைக்​கும் வகை​யில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும். தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்​கைப் பாது​காப்​ப​தில் முதல்​வர் கவனம் செலுத்த வேண்​டும். அதே​போல, போதைப்​பொருள் புழக்​கத்​தைக் கட்​டுப்​படுத்​த​வும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

சட்​டப்​பேர​வைக்கு 2026 ஏப்​ரல் அல்​லது மே மாதம் தேர்​தல் நடக்​கும். தேர்​தல் அறி​விப்​புக்கு 2 மாதங்​களுக்கு முன்​பு​தான் தேர்​தல் பணி​களை தொடங்​கு​வார்​கள். ஆனால், தோல்வி பயம் காரண​மாக, திமுக 2 ஆண்​டு​களுக்கு முன்​பாகவே தேர்​தல் பிரச்​சா​ரத்தை தொடங்​கி​விட்​டது. இவ்​வாறு அவர் கூறி​னார்.