பொதுப்பணித்துறை ஊழியர்கள் பணி நியமனம்.. ஒன்று திரண்ட அரசு ஊழியர்கள்.. பறந்த கோரிக்கை

சென்னை: பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்னர். உதவியாளர் நேரடி நியமனம் 50% தேர்வாணையம் மூலம் நியமனம் செய்வதை ரத்து செய்து, 2017 முதல் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறைகளில் காலியாக உள்ள 450க்கு மேற்பட்ட உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் உடனே நிரப்பிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்..
பொதுபணிதுறை ஊழியர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிபணியாளர் சங்கத்தின் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் வளாகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது...
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிபணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் செல்வம் பேசுகையில், பொதுப்பணித்துறையில் உதவியாளர் நேரடி நியமனம் 50% தேர்வாணையம் மூலம் நியமனம் செய்வதை ரத்து செய்து, 2017 முதல் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறைகளில் காலியாக உள்ள 450க்கு மேற்பட்ட உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் உடனே நிரப்பிட வேண்டும்..
பதவி மாற்றம் மூலம் இளநிலை வரைதொழில் அலுவலர் (சிவில். மெக்கானிக்கல்) பதவி உயர்வு வழங்குவது தொடர்பான அரசு ஆணை 69-ஐ ரத்து செய்து ஏற்கனவே நடைமுறையில் இருந்த விதிகளின்படி அனைத்து நிலை அலுவலர்களுக்கும் பதவி மாற்றம் மூலம் இளநிலை வரை தொழில் அலுவலர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
தமிழக அரசில் பணிபுரியும் பல்வேறு துறை ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ளதுபோல் பொதுப்பணித்துறை, நீர்வளத்துை ஊழியர்களுக்கும் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும். கோட்டக் கணக்கர் பதவியினை நெடுஞ்சாலைத்துறையில் நடைமுறையில் உள்ளது போல் மாநில சேவையாக்கப்பட வேண்டும்....
பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையில் நீதிமன்ற வழக்குகள் அதிக அளவில் உள்ளது. இவ்வழக்குகளை விரைவில் தீர்வு செய்வதற்கு மண்டல அலுவலகங்களில் சட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனவும், அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்"இவ்வாறு கோரிக்கை வைத்தார்..