ஏஐ யோசிக்கிற போக்கை கணிக்க முடியவில்லை.. நிலைமை கைமீறி போகுது! ஏஐ தொழில்நுட்பத்தின் தந்தை எச்சரிக்கை

சென்னை: OpenAI, Google DeepMind மற்றும் Meta ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து, அவர்கள் உருவாக்கி வரும் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏஐ எப்படி செயல்படுகிறது என்பதை யூகிக்க முடியவில்லை, ஏஐ செயல்படும் விதம் நாளுக்கு நாள் குழப்ப தொடங்கிவிட்டது என்று கூறி உள்ளார்.
AI ஆராய்ச்சியில் மிகவும் மதிக்கப்படும் பெயர்களான ஜெஃப்ரி ஹிண்டன் மற்றும் யோஷுவா பெஞ்சியோ ஆகியோர், சக்திவாய்ந்த AI அமைப்புகள் அடுத்த சில வருடங்களுக்குள் உருவாகலாம் என்று கூறியுள்ளனர். 'AIயின் தந்தை' என்று அழைக்கப்படும் ஹிண்டன் , AI மனிதர்களை விட புத்திசாலித்தனமாக மாறக்கூடும் என்றும், அதனால் நாம் தயாராக இல்லாத ஆபத்துகள் ஏற்படலாம் என்றும் எச்சரித்து உள்ளார்.
அணு ஆயுதத்தை விட மோசம்
தொற்றுநோய்கள் அல்லது அணு ஆயுதப் போர்களின் அபாயங்களைப் போலவே, AI மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் அபாயத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் இணைந்து இது தொடர்பாக பொது அறிக்கை வெளியிட்டு உள்ளது. மனித விதிகளுக்கு சூப்பர்-இன்டெலிஜென்ட் AI அமைப்புகள் கட்டுப்படாமல் செயல்படும் வாய்ப்புகள் உள்ளன. பெரிய போர், இயற்கை பேரிடர் போன்ற மோசமான நிகழ்வுகளில் மனித இருப்பை அச்சுறுத்தக்கூடும் செயல்களில் ஏஐ ஈடுபடலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பில்லியனரான எலான் மஸ்க் மற்றும் AI முன்னோடியான ஸ்டூவர்ட் ரஸ்ஸல் உள்ளிட்ட பல தொழில்நுட்பத் தலைவர்கள், ChatGPT இன் தற்போதைய மாடல்களை விட வலுவான AI அமைப்புகளை உருவாக்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். அரசாங்கங்களும் நிறுவனங்களும் சரியான பாதுகாப்பு சோதனைகள் மற்றும் ஒழுங்குமுறைகளைச் செய்ய குறைந்தது ஆறு மாதங்களுக்கு இதுபோன்ற வேலைகளை நிறுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்
அதேபோல் செயற்கை நுண்ணறிவு (AI) காரணமாக பல அறிவாளிகள், சாமர்த்தியமானவர்கள் வேலையை இழக்க நேரிடும் என்று ராபர்ட் கியோசாகி எச்சரித்துள்ளார். AI தொழில்நுட்பம், ஒரு காலத்தில் சிறப்பானதாக, பாதுகாப்பானதாகக் கருதப்பட்ட பல வேலைகளை தானியங்கி மயமாக்குவதால் வேலையின்மை அதிகரிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
வேலை மார்க்கெட்டில் உலகளவில் மிகப்பெரிய வீழ்ச்சி நடக்க போவதாக ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார்.
கல்விக் கடனும் வேலை இழப்பும்
கல்லூரியில் படித்து கல்விக் கடன் சுமையுடன் இருக்கும் மாணவர்கள், குறிப்பாக சமீபத்தில் பட்டம் பெற்றவர்கள், பாரம்பரியமான வழியில் வேலை தேடி பெறுவது சாத்தியம் இல்லை. பலருக்கு வேலை கிடைக்காது. ஏற்கனவே வேலை உள்ள பலர் அதை இழக்க நேரிடும். பலருக்கும் இப்போது வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதை எண்ணி கியோசாகி கவலை தெரிவித்துள்ளார். வேலைக்குச் செல்வதை விட தொழில் முனைவோராகவும், முதலீட்டாளராகவும் இருப்பது சிறந்தது என்பது அவரது நம்பிக்கை
கியோசாகி கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழக்கமான பாதையை கேள்விக்குள்ளாக்கி வருகிறார். பள்ளிக்குச் சென்று, நல்ல மதிப்பெண்கள் பெற்று, வேலை வாங்கி, பணம் சேமிப்பது போன்ற பழைய முறையை பயன்படுத்தி வாழ்க்கையில் செட்டில் ஆக முடியாது. அதை வைத்து இப்போது நிதி பாதுகாப்பை உறுதி செய்யாது.. வேலை மார்க்கெட்டில் உலகளவில் மிகப்பெரிய வீழ்ச்சி நடக்க போவதாக ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார்.