நாடு முழுக்க 50% வரை குறையும் சுங்க கட்டணம்... இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு.. ஆனா ஒரு ட்விஸ்ட்

நாடு முழுக்க 50% வரை குறையும் சுங்க கட்டணம்... இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு.. ஆனா ஒரு ட்விஸ்ட்
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை 50% வரை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை 50% வரை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது பாலங்கள், சுரங்கங்கள், மேம்பாலங்கள் அல்லது உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலைகள் போன்ற கட்டமைப்புகள் உள்ள பகுதிகளுக்கான சுங்கக் கட்டணம் கணக்கிடும் முறை மாற்றப்படுவதால் சுங்கக் கட்டணம் கணிசமாகக் குறையப் போகிறது.

நமது நாடு முழுக்க தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கச் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நெடுஞ்சாலைகள் அமைக்கவும், அதைப் பராமரிக்கவும் ஆகும் செலவுகளைச் சரிக்கட்டவே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் சுங்கக் கட்டணம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பலரும் புலம்புவதை நாம் கேள்விப்பட்டு இருப்போம்

இந்தச் சூழலில் தான் தேசிய நெடுஞ்சாலைகளில் பாலங்கள், சுரங்கங்கள், மேம்பாலங்கள் போன்ற கட்டமைப்புகள் உள்ள பகுதிகளில் சுங்கக் கட்டணத்தை 50% வரை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நமக்கு வரும் காலங்களில் சுங்கக் கட்டணம் கணிசமான அளவுக்குக் குறையும். இது பொதுமக்களுக்குப் பெரியளவில் பலனைத் தருவதாகவே இருக்கும்.

தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணத்தைக் கணக்கிடப் புதிய பார்முலாவை உருவாக்கியுள்ளதாகச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் கூறியுள்ளது. புதிய பார்முலாவின்படி, ஒரு நெடுஞ்சாலையில் பாலங்கள், சுரங்கங்கள், மேம்பாலங்கள் அல்லது உயர்த்தப்பட்ட சாலைகள் இருந்தால் அதன் நீளத்தில் 10 மடங்கு அல்லது ஒட்டுமொத்தச் சாலையின் 5 மடங்கு நீளம் மட்டுமே சுங்க கட்டணத்திற்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

அதாவது நாம் நெடுஞ்சாலைகளில் செல்லும்போது ஒரு கிமீக்கு இத்தனை ரூபாய் என்றே சுங்கக் கட்டணம் கணக்கிடப்படும். நெடுஞ்சாலையில் பாலங்கள், சுரங்கங்கள், மேம்பாலங்கள் இருந்தால் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்தச் சுங்கக் கட்டணம் கணக்கிடும் முறை இப்போது மாற்றப்பட்டுள்ளது.