திருச்செந்தூர் குடமுழுக்கு: சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

திருச்செந்தூர் குடமுழுக்கு: சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

சென்னை எழும்பூர் டூ செங்கோட்டை இடையே வரும் 6ம் தேதி மற்றும் 7ம் தேதி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

குடமுழுக்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

திருச்செந்தூர் முருகன் கோவில் குடுமுழுக்கு வருகிற 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. குடமுழுக்கை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருச்செந்தூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குடமுழுக்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

இந்நிலையில், திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவின்போது ஏற்படும் கூடுதல் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூர் டூ செங்கோட்டை இடையே வரும் 6ம் தேதி மற்றும் 7ம் தேதி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

6ம் தேதி சென்னை எழும்பூர்- செங்கோட்டை வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

வரும் 7ம் தேதி செங்கோட்டை- சென்னை எழும்பூர் வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இதற்கான முன்பதிவுகள் 04.07.2025 அன்று காலை 08:00 மணிக்கு தொடங்கும் எனவும், பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும்படியும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது