தமிழ்நாடு அரசின் புதிய உத்தரவால் பயிர்க்கடன் மறுப்பா? விவசாயிகள் புகாரும் அமைச்சர் பதிலும்

****AGNISIRAGU****
கடந்த 10 நாட்களாக பயிர்க்கடன் வாங்க முடியவில்லை. வேறு வங்கிகளில் பயிர்க்கடன் நிலுவையில் இல்லை என்ற சான்று கொடுத்தால் மட்டுமே கடன் கொடுப்போம் என்று கூட்டுறவு வங்கிகள் நெருக்கடி கொடுக்கின்றன. இதனால் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை" எனக் கூறுகிறார், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த வாழை விவசாயி வேலுசாமி.
பயிர்க்கடன் தொடர்பாக ஜூன் 12-ஆம் தேதி கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையே இதற்குக் காரணம் என விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஆனால், விவசாயிகள் இரு இடங்களில் கடன் பெறுவதால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுவதாகக் கூறுகிறார், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன். என்ன பிரச்னை?
விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதில் என்ன சிக்கல்?
தமிழ்நாட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் நெல், கரும்பு, பருத்தி, நிலக்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை பயிரிட பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் கிஷான் கிரடிட் கார்டு (கேசிசி) மூலம் 7 சதவீத மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது.
இது தவிர, நகைக்கடன், விசைத்தறி கடன், கால்நடைக் கடன் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இதை ஓராண்டு காலத்துக்குள் செலுத்திவிட்டால் வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது
****AGNISIRAGU****