ஆதார் ,ரேஷன் கார்டில் மாற்றம் செய்யனுமா?

ஆதார் ,ரேஷன் கார்டில் மாற்றம் செய்யனுமா?
இந்த சான்ஸ் மறுபடியும் கிடைக்காது உடனே கிளம்புங்க..

சென்னை: அரசின் சேவைகள் நேரடியாக மக்களுக்கே சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் வரை 10,000 சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் மக்கள் இவற்றை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே திமுக அரசை பொறுத்தவரை இந்த முகாம்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன. பொதுமக்களும் அரசு சேவைகளை பெறுவதற்கு ஈ சேவை மையங்கள், அரசு அலுவலகங்கள், அதிகாரிகள் என மாறி மாறி அலைய வேண்டி இருக்கும். அத்தகைய அலைச்சல் ஏதும் இல்லாமல் மக்கள் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

மகளிர் உரிமைத் தொகை : குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பம் செய்ய வேண்டும் என காத்திருந்த பெண்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்களை முகாம்களுக்கு நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளலாம். அங்கேயே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பித்துவிட்டால் அடுத்த 45 நாட்களுக்குள் மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா என்பது தெரிந்துவிடும். இதற்கு ரேசன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்களோடு பெண்கள் செல்ல வேண்டும்...

எங்கே முகாம் நடக்கிறது?: மக்கள் தங்களுடைய ஊரில் எங்கெல்லாம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது என்பதை அறிந்து கொள்வதற்காகவே தமிழ்நாடு அரசு https://ungaludanstalin.tn.gov.in/ என்ற பிரத்தேக இணையதளத்தை தொடங்கி இருக்கிறது. இந்த இணையதளத்திற்குள் சென்றால் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட மாவட்டத்தின் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறுகின்றன என்ற விவரங்கள் காட்டப்படுகின்றன. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் என்னென்ன சேவைகள் பெற முடியும் என்பதை அதில் தெரிந்து கொள்ளலாம். குழந்தை பிறப்பு சான்றிதழ்: பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ்களை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். மருத்துவமனையில் வழங்கப்பட்ட குழந்தை பிறந்ததற்கான சான்று மற்றும் தாய், தந்தையின் ஆதார் அட்டை இந்த இரண்டு ஆவணங்களும் கொண்டு தங்கள் குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ்களை உடனே பெற்றுக் கொள்ள முடியும்

பட்டா, சிட்டா: பட்டா மாறுதல், பட்டாவில் பெயர் திருத்தம் உள்ளிட்டவற்றுக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதாரமாக கிரைய பத்திரம் அல்லது செட்டில்மெண்ட் பத்திரம் அல்லது பாகப்பிரிவினை பத்திரம் , வில்லங்க சான்று தேவைப்பட்டால் இறப்பு சான்று மற்றும் வாரிசு சான்று உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

வாரிசு சான்றிதழ்: இதுவரை வாரிசு சான்றிதழ் பெறாதவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சென்று விண்ணப்பிக்கலாம். பெரிய அலைச்சல் உங்களுக்கு இருக்காது. அதே போல ஜாதி சான்றிதழ் ,வருமானச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்டதற்கான சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களையும் முகாம் மூலம் விண்ணப்பித்து பெற முடியும். பொதுவாக இவற்றுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றால் மக்கள் பல நாட்கள் அலைய வேண்டி இருக்கும்

உதவித்தொகை விண்ணப்பம்: முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, திருமணமாகாத பெண்கள் உதவி தொகை ஆகிய திட்டங்களிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக விண்ணப்பம் செய்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்ற விவரங்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம் சம்பந்தப்பட்ட இணையதளத்திலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது..