62.கிமீக்கு சென்னையில் நடக்க போகும்.. தரமான சம்பவம்.. இன்ச் இன்ச்சா செதுக்க போறாங்க.. கவனம்

62.கிமீக்கு சென்னையில் நடக்க போகும்.. தரமான சம்பவம்.. இன்ச் இன்ச்சா செதுக்க போறாங்க.. கவனம்
சென்னையில் பாதசாரிகள் எளிதாக நடக்கும் வகையில் மாற்று நடவடிக்கை

சென்னை: சென்னையில் பாதசாரிகள் எளிதாக நடக்கும் வகையில் மாற்று நடவடிக்கையாக, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் (CUMTA) தனது 25 ஆண்டு கால விரிவான போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் பல மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளது.

ஏழு பகுதிகளாக சென்னையை பிரித்து 62 கி.மீ., தூரத்துக்கு நடைபாதைகளை விரிவுபடுத்தவும், மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த குழுக்களில் நந்தம்பாக்கம், அம்பத்தூர், சூளைமேடு, அசோக் நகர், அரும்பாக்கம், வியாசர்பாடி மற்றும் வில்லிவாக்கம் ஆகியவை அடங்கும். இதில் அசோக் நகர் மற்றும் வியாசர்பாடியில் தலா 15 கி.மீ., தூரத்துக்கு நடைபாதைகள் மேம்படுத்தப்பட உள்ளன.

இந்த இடங்கள் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகாமையில் இருக்கும். பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்கள் போன்ற பொதுப் போக்குவரத்துக்கான அணுகல் மற்றும் அதிக பாதசாரி விபத்து நடக்கும் இடங்கள் ஆகிய மூன்று அளவுகோல்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டன.

தற்போது, இந்த பகுதிகளில் உள்ள பெரும்பாலான நடைபாதைகள் 1.2 மீட்டர் அகலம் மட்டுமே கொண்டு மோசமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. புதிய வடிவமைப்புகள் அவற்றை 1.8 மீட்டராக அகலப்படுத்தும், இது இருவழி பாதசாரி இயக்கத்திற்கும், சக்கர நாற்காலி அணுகலுக்கும் உதவும். ஜிஎஸ்டி சாலை போன்ற எதிர்கால தார் சாலை மேம்பாடுகளுக்கு 2.5 மீட்டர் அகலம் வரை நடைபாதைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.

மொத்தமுள்ள 62 கி.மீ., தூரத்தில் 17 கி.மீ., தூரத்திற்கான பூர்வாங்க மதிப்பீடுகளை கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் முடித்துள்ளது. இந்த திட்டங்களில் கைப்பிடிகள், கிரானைட் நடைபாதைகள் மற்றும் தடுப்புகள் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒன்பது மண்டலங்களில் உள்ள 23 சாலைகளின் ஆய்வுகள் முடிந்துவிட்டன, பருவமழை நிலைமைகளை கணக்கில் கொண்டு விரைவில் கள ஆய்வு தொடங்கும்

.சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பாதசாரிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் (CUMTA), 25 வருடங்களுக்கான விரிவான போக்குவரத்து திட்டத்தை (Comprehensive Mobility Plan - CMP) உருவாக்கி வருகிறது.