அமெரிக்கா, சவுதி அல்ல.. கச்சா எண்ணையை அதிகம் சேமித்து வைத்திருக்கும் நாடு இதுதான்..

உலகில் கச்சா எண்ணெய்யை அதிகம் சேமித்து வைத்திருக்கும் நாடு எது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கச்சா எண்ணெயில் இருந்து தான் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
கச்சா எண்ணெய் என்றதுமே நமக்கு மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ரஷ்யா உள்ளிட்டவை நம் நினைவுக்கு வரும் உற்பத்தியை பொறுத்த அளவில் அமெரிக்கா ஆண்டுக்கு மிக அதிகமாக கச்சா எண்ணையை உற்பத்தி செய்து வருகிறது.
சவுதி அரேபியா, ஈரான், ஈராக் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் பெரும்பாலும் கச்சா எண்ணெய் வளம் மிக்கவை என்று கூறப்பட்டாலும், எண்ணெய் இருப்பு வைத்திருப்பதில் அவை முதலிடத்தில் இல்லை.
வேர்ல்டோமீட்டரின் தரவுகளின்படி வெனிசுலா நாடுதான் கச்சா எண்ணெயை அதிகம் சேமித்து வைத்திருக்கிறது. அங்கு சுமார் 303,008 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் நிலத்தடியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.