ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் விவாகரத்து வழக்குகளில் ஆதாரமா? உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு

ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் விவாகரத்து வழக்குகளில் ஆதாரமா? உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு
ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் விவாகரத்து வழக்குகளில் ஆதாரமா? உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை ரத்து செய்து, விவாகரத்து வழக்குகளில் ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களை ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

குடும்ப உறவுகளில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். ஆனால், அந்த நம்பிக்கை சிதைந்து, துணைகள் ஒருவருக்கொருவர் உளவு பார்க்கும் நிலைக்குச் சென்றால், அதுவே , அதுவே உறவு முறிந்துவிட்டதற்கான அறிகுறிதான் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை ரத்து செய்து, விவாகரத்து வழக்குகளில் ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களை ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு

முன்னதாக, ஒரு விவாகரத்து வழக்கில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், "மனைவியின் அனுமதியின்றி அவரது தொலைபேசி உரையாடலைப் பதிவுசெய்வது, அவரது தனியுரிமைக்கான அடிப்படை உரிமையின் அப்பட்டமான மீறல்" என்று கூறி, அத்தகைய ஆதாரங்களை விவாகரத்து வழக்குகளில் பயன்படுத்த முடியாது என உத்தரவிட்டிருந்தது. 

 

பட்டிண்டா குடும்ப நீதிமன்றம், ஒரு கணவர் தனது மனைவிக்கு எதிரான கொடுமை குற்றச்சாட்டுகளை நிரூபிக்க, பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களை ஆதாரமாகப் பயன்படுத்த அனுமதித்திருந்தது. இதை மனைவி உயர் நீதிமன்றத்தில் எதிர்த்தார். தனது அனுமதியின்றி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், அதை ஆதாரமாகப் பயன்படுத்த அனுமதிப்பது தனது தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை மீறும் என்றும் வாதிட்டார்.

உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு:

இருப்பினும், இந்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் எஸ்.சி. ஷர்மா அடங்கிய அமர்வு, "அத்தகைய ஆதாரங்களை அனுமதிப்பது குடும்ப நல்லிணக்கத்தைப் பாதிக்கும் மற்றும் திருமண உறவுகளைச் சீர்குலைக்கும், ஏனெனில் இது துணையை உளவு பார்க்கத் தூண்டும் என்று சில வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், இந்த வாதத்தை நாங்கள் ஏற்கவில்லை. ஒரு திருமணம், துணைகள் ஒருவரையொருவர் ரகசியமாக உளவு பார்க்கும் நிலையை அடைந்துவிட்டால், அதுவே உறவு முறிந்துவிட்டதற்கான அறிகுறிதான். இது அவர்களுக்கு இடையே நம்பிக்கையின்மை இருப்பதைக் குறிக்கிறது" என்று தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, விவாகரத்து வழக்குகளில் ஆதாரம் சேகரிப்பதில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியுரிமை உரிமை குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உறவுகளின் முறிவு மற்றும் நம்பிக்கையின்மை போன்ற காரணிகள், சில சமயங்களில் தனியுரிமை மீறல்களை விடவும் மேலோங்கி நிற்கலாம் என்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்துகிறது. இது வருங்கால விவாகரத்து வழக்குகளில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளால் எவ்வாறு கையாளப்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.