இறந்தோரின் தங்க நகைகளை அணியலாமா, இரவல் தங்கத்தை அணிய செய்ய வேண்டியது? வீட்டின் கோல்டன் டிப்ஸ்

இறந்தோரின் தங்க நகைகளை அணியலாமா, இரவல் தங்கத்தை அணிய செய்ய வேண்டியது? வீட்டின் கோல்டன் டிப்ஸ்
தங்க நகைகளை உபயோகிக்கும்போதுகூட சில விஷயங்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது

சென்னை: தங்க நகைகளை உபயோகிக்கும்போதுகூட சில விஷயங்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.. அதேபோல, பிறர் உபயோகித்த நகைகளை உபயோகிக்கலாமா? குறிப்பாக இரவல் நகையை உபயோகிக்கலாமா? இறந்தவர்களின் நகையை அணிந்து கொள்ளலாமா? தங்க நகை எப்போது வாங்க வேண்டும்? இவைகளை பற்றியெல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

சனிக்கிழமை, ரோகிணி நட்சத்திரம், அமிர்தயோகம் இந்த 3 அம்சமும் நிறைந்த நாளன்று தங்கத்தை வாங்கலாம்.. அதிலும், "ஓம் தங்க கணபதி வஸ்ய வஸ்ய நம" என 108 முறை பாராயணம் செய்துவிட்டு தங்கம் வாங்கினால், கூடுதல் தங்கம் வீட்டில் அதிகரிக்குமாம்.

லக்கினத்தில் குரு,10 ல் சந்திரன், 11ல் புதன் என்ற நிலைகளின் காலகட்டத்திலும் நகை வாங்கலாம்.. வெள்ளி கிழமைகளில், கடவுள் படங்களுக்கு தங்க நகைகளை அணிவித்து வந்தாலும் தங்க்ம் பெருகும்.

தங்கம் வைக்க உரிய திசை

தங்க நகைகளை எப்போதும் தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும்.. பீரோ லாக்கர்கள், வடக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும்... அதேபோல, ஈசானிய மூலையில் தங்க நகைகளை வைக்கலாம்... எக்காரணம் கொண்டும், வீட்டின் வடமேற்கு திசையில் தங்கம் வைப்பதை தவிர்க்கலாம்.

அதேபோல, சமையலறையில், அதிலும், மகாலட்சுமி வாசம் செய்யும் , பருப்பு, அரிசி அஞ்சறை பெட்டிகளில் தங்க நகைகளை வைப்பதை தவிர்க்க வேண்டும்.. அடுப்பு மேடையில் தங்க நகைகளை வைக்கக்கூடாது.. வட மேற்கு மூலையிலுள்ள அறையிலும் தங்க நகைகளை வைக்கக்கூடாது

இறந்தவர்கள் நகைகள்

இறந்தவரின் நகைகளை அணிந்தால், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பார்கள்.. உடல்நிலை, தொழிலிலும் பலவீனம் ஏற்படலாம். அதிலும், ஜாதகத்தில் சூரியனின் நிலை பலவீனமாக இருந்தால், இறந்தவர்களின் நகைகளை பயன்படுத்த கூடாது என்பார்கள்.

கூடுமானவரை இறந்தவர்கள் பயன்படுத்திய தங்கம், மற்றும் வெள்ளி நகைகளை நினைவுப்பொருளாக பத்திரப்படுத்தி வைக்கலாம்.. அல்லது அந்த நகையை விற்று, குலதெய்வம் கோயிலுக்கு உபயம் தரலாம்.. அன்னதானமும் செய்யலாம்..

ஒருவேளை இறந்தவர்களின் பயன்படுத்த வேண்டுமானால், அவைகளை சுத்தம்செய்துவிட்டு பயன்படுத்த வேண்டும். இதற்கு கங்கை நீரில் ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து எடுத்து, மஞ்சள் நூலால் கட்டி 21 நாள்கள் அப்படியே வைத்து வைத்து விடவேண்டும். பிறகுதான் தங்கத்தை உபயோகிக்க முடியும்.. அல்லது அந்த நகையை உருக்கி வேறு வடிவமாக செய்து பயன்படுத்தலாம்..

எனினும், ஒருவர் இறந்தால், உடனே அந்த நகையை பயன்படுத்தவும் முடியாது, விற்கவும் கூடாது என்பார்கள்.. எனவே, அந்த நகையை சுத்தமான மஞ்சள் நீரில் கழுவி விட்டு எடுத்து துடைத்து, ஒரு பர்ஸில் போட்டு, அதற்குள் ஒரு துளசியையும் போட்டு பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இறந்த வீட்டில் தீட்டுக்கழியும் வரை காத்திருக்க வேண்டும்.. அதற்கு பிறகே இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

அதேபோல, இரவலாக தரும் நகைகளையோ, அல்லது ஒருவர் போட்ட நகையை வாங்கி, அப்படியே அணிந்து கொள்ளக்கூடாது. இது தோஷத்தை ஏற்படுத்தும்.. தோஷத்துடன் நகை அணிந்து கொள்வது, பலவிதமான இன்னல்களை தந்துவிடும்..

எனவே, பிறரது நகைகளை பயன்படுத்தும் முன்பு, பன்னீர், கஸ்தூரி மஞ்சளை நீரில் கலந்து, அதை இரவல் நகைகளை மூழ்கி எடுத்து, பிறகு அணிந்து கொள்ளலாம்.