முதல்வர் மருந்தகங்களில் குழந்தைகளுக்கான மருந்துகளுக்கு பற்றாக்குறை: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

முதல்வர் மருந்தகங்களில் குழந்தைகளுக்கான மருந்துகளுக்கு பற்றாக்குறை: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
நைனார் நாகேந்திரன்

சென்னை: முதல்வர் மருந்தகங்களில் குழந்​தைகளுக்​கான மருந்​துகள் மற்​றும் தோல், புற்​று​நோய் உள்​ளிட்ட பல மருந்துகளுக்குகடும் பற்​றாக்​குறை ஏற்​பட்​டுள்​ள​தாக நயி​னார் நாகேந்​திரன் குற்​றம்​சாட்டி உள்​ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்​கத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: ஏழை, எளிய மக்​களுக்கு மலிவு விலை​யில் மருந்​துகள் கிடைக்கும் நோக்​கத்​தில் கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி​யால் நாடு முழு​வதும் தொடங்கி வைக்​கப்​பட்ட மக்​கள் மருந்தகத்தின் மீது ஸ்டிக்​கர் ஒட்டி ‘முதல்​வர் மருந்​தகம்” என்ற பெயரில் தமிழகத்​தில் திறந்​தது திமுக அரசு.

75 சதவீதம் தள்​ளு​படி​யுடன் ஜெனிரிக் மருந்​துகள் கிடைக்​கும் என விளம்​பரப்​படுத்​திக் கொண்ட முதல்​வர் மருந்​தகங்​களில் தோல் நோய் சம்​பந்​தப்​பட்ட மருந்​துகள், குழந்​தைகளுக்​கான மருந்​துகள், புற்​று​நோய் மருந்​துகள் உள்​ளிட்ட பல மருந்​துகளுக்கு கடும் பற்றாக்​குறை நில​வுவ​தாக மக்​கள் குற்​றம் சாட்டி வரு​கின்​றனர்.

பிரதமரின் மக்​கள் மருந்​தகங்​களில் சுமார் 2000-க்​கும் மேற்​பட்ட ஜெனிரிக் மருந்​துகள் மக்​கள் பயன்​பாட்​டுக்​காக விற்கப்படுகின்றன. ஆனால் முதல்​வர் மருந்​தகங்​களில் வெறும் 300 வகை மருந்​துகள் மட்​டுமே இருப்பு உள்​ள​தாக​வும், அதி​லும் விற்பனை​யா​காத மருந்​துகள்தான் அதி​கள​வில் உள்​ள​தாக​வும் மக்​கள் கூறு​வது, திமுக அரசின் நிர்​வாகக் குளறு​படிகளை அடிக் கோடிட்​டுக் காட்​டு​கிறது.

எனவே, தமிழகம் முழு​வதும் செயல்​பட்டு வரும் 1000 மக்​கள் மருந்​தகங்​களில் அனைத்து மருந்​துகளும் கிடைக்​கின்​றனவா என்​பதை ஆய்வு செய்​து, முதல்​வர் மருந்​தகங்​களில் உள்ள செயல்​பாட்டு சிக்​கல்​களைத் தீர்க்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.