தொட்டதெல்லாம் சிக்சர் தான்! வீட்டுமனைப் பட்டா.. மகளிர் உரிமைத் தொகை! தமிழக அரசின் சூப்பர் திட்டங்கள்

தொட்டதெல்லாம் சிக்சர் தான்! வீட்டுமனைப் பட்டா.. மகளிர் உரிமைத் தொகை! தமிழக அரசின் சூப்பர் திட்டங்கள்
திராவிட மாடல் அரசு சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ்இதுவரை 41,38,833 மாணவர்களுக்கும் 1,00,960 விரிவுரையாளர்களுக்கும் பயிற்சிகள், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 1.15 கோடி மகளிர் பயன், மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 14,45,109 வீட்டு மனைப் பட்டாக்கள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள் படைத்துள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில்,"தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் எண்ணற்ற புதுமையான திட்டங்களை உருவாக்கி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இந்தப் புதுமையான திட்டங்கள் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள - விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வளர்ச்சியை உறுதி செய்கின்றன.

முதலமைச்சர் அவர்களின் தனித்தன்மை வாய்ந்த இத்திட்டங்கள், பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி, சுகாதாரம், ஊரகம், நகர்ப்புற வளர்ச்சி, சமூக நீதி ஆகிய 7 முக்கிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.