உயிருக்கு உயிராக நேசிப்பதாகச் சொன்னான்.. சரி என்றேன்" - காதல் குறித்து மனம் திறந்த அனுஷ்கா!

"உயிருக்கு உயிராக நேசிப்பதாகச் சொன்னான்.. சரி என்றேன்" - காதல் குறித்து மனம் திறந்த அனுஷ்கா!
நடிகை அனுஷ்கா ஷெட்டி தனது ஆறாம் வகுப்பில் பெற்ற முதல் காதல் ஃப்ரோபோஸல் குறித்து பேசியுள்ளார். 'காதி' படத்தின் வெளியீடு தாமதமாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் நடிப்பில் வெளிவந்த பாகுபலி, சிங்கம், பில்லா உள்ளிட்ட ஏராளமான படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அனுஷ்கா நடித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை
இப்போதெல்லாம் அனுஷ்கா பெயரை சொன்னாலே அவரின் திருமணம் குறித்து பேச்சுகள்தான் எழுகின்றன. திருமண வயதை கடந்த பிறகும் அனுஷ்கா இன்னும் சோலோவாக சுற்றி வருகிறார். இதன் காரணமாக, அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயங்கள் அடிக்கடி தலைப்பு செய்திகளாக மாறுகின்றன.
பாகுபலி படத்தில் தன்னுடன் நடித்த பிரபாஸும் அனுஷ்காவும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பல வதந்திகள் வந்தன. அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்க்கும் போதெல்லாம், இதுபோன்ற வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால், பிரபாஸும் அனுஷ்காவும் இந்த செய்தியை ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை. மாறாக "நாங்கள் நண்பர்கள்" என்று அவர்கள் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளனர். மறுபுறம், அனுஷ்காவின் பெற்றோர் அவருக்கு தீவிரமாக வரன் பார்த்து வருவதாகவும், ஆனால், அனுஷ்கா தான் திருமணத்துக்கு சம்மதிக்க மறுக்கிறார் என்றும் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே, அனுஷ்காவின் பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் அனுஷ்கா தனக்கு வந்த காதல் பிரபோசல் குறித்து பேசியிருக்கிறார். அனுஷ்காவுக்கு எப்போது முதல் காதல் பிரபோசல் வந்தது என்று தெரிந்தால் நீங்கள் மிகவும் அதிர்ச்சியடைவீர்கள். அவர் ஆறாம் வகுப்பு படிக்கும் போது காதல் பிரபோசல் வந்ததாக அனுஷ்காவே ஒரு நேர்காணலில் இதை வெளிப்படுத்தினார்
அந்த நேர்காணலில், "நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, என் வகுப்பில் இருந்து ஒரு பையன் என்னிடம் வந்து, 'நான் உன்னை காதலிக்கிறேன்' என்றான். அவன் என்னை உயிருக்கு உயிராக நேசிப்பதாகச் சொன்னான். அந்த நேரத்தில், 'நான் உன்னை காதலிக்கிறேன்' என்றால் என்னவென்று கூட எனக்குத் தெரியவில்லை. ஆனால், 'சரி' என ஏற்றுக் கொண்டேன். காதல் என்னவென்றே புரியாத வயதில் நடந்து அது என் வாழ்க்கையில் ஒரு இனிமையான நினைவாகவே இன்றும் உள்ளது" என்று அனுஷ்கா கூறுகிறார். இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது
அனுஷ்கா ஷெட்டி காதி (Ghaati) என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். பாதிக்கப்பட்ட ஒருவர் கிரிமினலாக மாறி அதன் பின்னர் முக்கிய நபராக செல்வாக்கு பெறுவது தான் இந்த காதி படத்துடைய ஒன்லைனாக உள்ளது. திட்டமிட்டபடி இந்த திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இருப்பதால் இந்த திரைப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என பட தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த காலதாமதம் ரசிகர்களுக்கு மிகவும் தரமான ஒரு படத்தை கொடுக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா ஷெட்டியின் படம் வெளியாகவிருந்த நிலையில் அந்த திரைப்படம் தொடர்ந்து தள்ளிக் கொண்டு போவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது