தேயிலை தொழிலாளர்களாக மாறும் டூரிஸ்ட்... மக்களின் ஆர்வத்தால் எஸ்டேட்டில் புது முயற்சி...

நீலகிரி மாவட்டம் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலை காரணமாக ஆண்டுதோறும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு படையெடுக்கின்றனர்..
சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச் சிகரம், பைக்காரா மற்றும் பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசித்தாலும் இயற்கையாகவே நீலகிரிக்கு அழகு சேர்க்கும் தேயிலைத் தோட்டங்களில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்வதை அதிகமாக விரும்புகின்றனர்.
அந்த வகையில் ஊட்டி தொட்டபெட்டா சாலையில் 1992ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற டீக்கடை தான் ஹில் டீ. இவர்களது தேயிலைத் தோட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் விதமாக ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களது தேயிலைத் தோட்டத்தில் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி கட்டணமாக ரூபாய் 20 வசூலிக்கப்படுகிறது..