அஞ்சல் சேமிப்பில் சூப்பர் சான்ஸ்.. கிராம் சுரக்ஷா யோஜனா திட்டம்.. 50 ரூபாயில் ரூ.35 லட்சம் ரிட்டன்....

சென்னை தினமும் ரூ.50 முதலீடு செய்தாலே, முதிர்வு காலத்தில் ரூ.35 லட்சம் வரை கிடைக்கும் அஞ்சலக சேமிப்பு திட்டம் பற்றி தெரியுமா? இந்த திட்டத்தில் உள்ள சிறப்புகள் என்னென்ன? இந்த திட்டத்தில் முதலீடு செய்வது மற்றும் பலன்கள் என்னென்ன? இதன் கடன் வசதிகள் என்னென்ன? இந்த திட்டத்தில் இணைவதற்கான தகுதிகள் என்னென்ன என்பதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
இந்திய அஞ்சல் துறையானது, அனைவருக்குமான பலவிதமான சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியும், செயல்படுத்தியும் வருகிறது.
அஞ்சலக சேமிப்பு என்பது, மிகவும் பாதுகாப்பானதாகவும், உத்தரவாதம் தரக்கூடியதாகவும் இருப்பதால் பொதுமக்களும் இதற்கு பெரும் வரவேற்பை தந்து வருகிறார்கள்.. பணப்பாதுகாப்பும் உறுதி செய்யப்படுவதால் நம்பகத்தன்மையும் அதிகரிக்கிறது..
கிராம் சுரக்ஷா யோஜனா
அந்தவகையில், கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தை குறிப்பிட்டு சொல்லலாம். அஞ்சல் அலுவலகத்தின் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இது செயல்படுகிறது.. கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் 1995ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் பெண் தொழிலாளர்களுக்கும் உதவுவதற்காகவும், அவர்களது காப்பீடு அறிவை வளர்ப்பதும் தான் இந்த திட்டத்தின் முக்கியமான குறிக்கோளாகும்.. .
குறுகிய தொகையில் அதிக லாபம்
குறுகிய தொகையில் அதிக லாபத்தை தரக்கூடிய திட்டமாக இருப்பதால், கிராமப்புற மக்களின் அபரிமிதமான நம்பிக்கையை பெற்று வருகிறது. அந்தவகையில், தினந்தோறும் ரூ.50 வீதம், மாதத்துக்கு ரூ.1500 வரை முதலீடு செய்ய வேண்டும்.. இதனால், மெச்சூரிட்டி பணமாக 35 லட்சம் வரை எளிதாக பெறலாம்.
இந்த திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் 55 வயது வரையிலுள்ளவர்கள் இணையலாம்.. குறைந்தபட்ச காப்பீட்டு தொகையாக ரூ.10,000, அதிகபட்ச வரம்பாக ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுடன், மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் பிரீமியத்தை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
தபால் அலுவலக கிராம் சுரக்ஷா யோஜனா
80 வயதை நிறைவு செய்யும்போது, தபால் அலுவலக கிராம் சுரக்ஷா யோஜனாவில் முதலீடு செய்யும் பயனாளியிடம் ஒப்படைக்கப்பட்டு விடும்.. எனினும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளவர்கள், தொகையை முன்கூட்டியே கேட்பதால், விதிகளின்படி 55 வருட முதலீட்டில் ரூ.31 லட்சத்து 60 ஆயிரமும், 58 வருட முதலீட்டில் ரூ.33 லட்சத்து 40 ஆயிரமும், 60 வருட முதிர்வு காலத்தில் ரூ.34 லட்சத்து 60 ஆயிரமும் லாபம் கிடைக்கும்..
5 வருடங்கள் என்றால் மாதம் ரூ.1,515 தொகையும், 58 வருடங்கள் என்றால் 1,463 ரூபாய் மாதந்தோறும் முதலீட்டாளர் டெபாசிட் செய்யலாம். 60 வருடங்கள் என்றால் ஒருவர் 1,411 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும்.
59 வயது வரை எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றலாம், பிரீமியம் செலுத்துதல் நிறுத்தப்பட்ட தேதி அல்லது முதிர்வு தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் மாற்றும் தேதி வராது என்பதால், பிரீமியம் செலுத்தும் வயதை 55, 58 அல்லது 60 ஆக தேர்வு செய்யலாம்.
கடன் வசதி, போனஸ் உண்டு
கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில், கடன் வசதியும் உண்டு.. எனினும் திட்டத்தில் இணைந்து, அடுத்த 4 வருடங்களுக்கு பிறகுதான், கடன் வசதி கிடைக்கும்.
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தத் திட்டத்தில் போனஸும் கிடைக்கும். 5 வருடங்களுக்கு முன்னரே திட்டத்தை பிரீமியம் செலுத்தாமல் கைவிட்டால் போனஸ் தொகை கிடைக்காது. பிறகு 59 வயது வரை எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றிக்கொள்ளலாம்.
என்னென்ன வழிமுறைகள்
ஆனால் அதன் முதிர்வு காலம் ஒரு வருடத்திற்குள் இருக்குமாயின் அல்லது பிரீமியம் நிறுத்தம் ஏற்பட்டால் இந்த வாய்ப்புக்கு தகுதில்லை. பாலிசி முன்னரே சரண்டர் செய்யப்படுமாயின் குறைந்த காப்பீடு தொகை மற்றும் அதற்கு ஏற்ற சதவீதத்தில் மட்டுமே போனஸ் வழங்கப்படும். , பாலிசிதாரர் சரண்டர் செய்ய விரும்பினால், பாலிசி தொடங்கிய நாளிலிருந்து 3 வருடத்துக்கு பிறகு சரண்டர் செய்யலாம்.
கிராமங்களில் வசிக்கும் மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டு வரும் கிராம சுரக்ஷா யோஜனா திட்டம், கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களிலேயே மிகவும் பிரபலமான திட்டமாக விளங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது..