குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு! இன்று ரேஷன் கார்டுகளுக்கு ஒரே நாளில் தீர்வு

குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு! இன்று ரேஷன் கார்டுகளுக்கு ஒரே நாளில் தீர்வு
குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

சென்னை: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பொதுவினியோக திட்டத்தில் உள்ள குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணவும், மாதந்தோறும் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கமாக உள்ள நிலையில், அது சம்பந்தமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா (PHH-AAY) குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும், தங்களது விரல்ரேகையை (Biometric) பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 25.07.2025-க்குள் தங்களது விரல்ரேகையை பதிவு செய்து கொள்ளுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். மற்ற மாவட்டத்தில் இருப்பவர்களும் இந்த தேதிக்குள் ரேஷன் கார்டு கைவிரல் ரேகை பதிவு செய்து கட்டாயமாகும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால், கோடிக்கணக்கான மக்கள் பெரும்பலனை பெற்று வருவதுடன். ஏழை, எளிய, வாழ்வாதாரமும் காக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல, , குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை சொல்லுதல் போன்றவைகளையும், தமிழக அரசு தீர்த்து வைத்து வருகிறது.. இப்படி பொதுமக்களின் குறைகளையும், புகார்களையும், அதிருப்திகளையும் நிவர்த்தி செய்வதற்காகவே, குறைதீர்ப்பு முகாம்களை தமிழக அரசு ஒவ்வொரு மாதமும், மாவட்டந்தோறும் நடத்தி வருகிறது

இதுபோன்ற முகாம்கள் மூலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு உள்ள குறைகள் நேரடியாக கேட்கப்பட்டு, அவை உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டும் வருகின்றன.. அந்தவகையில், தற்போதும் அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை நடக்கும் பொதுவிநியோக திட்ட குறைத்தீர் முகாம்கள் இன்று அதாவது ஜூலை 12ம் தேதி நடக்க உள்ளது. சென்னை, திருவள்ளூர், கரூர், திருநெல்வேலி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு குறைகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

கடிதம் எழுதினார்

இது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குநர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் உள்ளதாவது

பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் சென்னையை பொறுத்தவரை மண்டல அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடத்தப்படும்.

அதன்படி ஜூலை 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 12.07.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது

கைப்பேசி எண் - புகார்கள்

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் அங்கீகாரச்சான்று உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கொள்ளப்படுகிறார்கள். பிற மாவட்டங்களில் மண்டல, வட்ட வழங்கல் அதிகாரிகள் அளவில் இந்த குறைதீர் முகாம்கள் நடத்தப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.