பெங்களூரு விஷால் மெகா மார்ட்… கொட்டிக் கொடுக்கும் ஆஃபர்… டிமார்ட்டுக்கு போட்டியா?

பெங்களூரு விஷால் மெகா மார்ட்… கொட்டிக் கொடுக்கும் ஆஃபர்… டிமார்ட்டுக்கு போட்டியா?
விஷால் மெகா மார்ட் கடையின் விற்பனை தொடர்பான தகவல்கள் பெரிதும் கவனம் பெற்று வரும் நிலையில், டிமார்ட் உடன் ஒப்பிட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் பின்னணி குறித்து விரிவாக அலசலாம்.

ஜவுளி, மளிகை பொருட்கள், FMCG பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்டவற்றின் விற்பனையில் பல்வேறு பிரபல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதில் ரிலையன்ஸ் ரீடெய்ல், மோர் சூப்பர் மார்க்கெட், டிமார்ட், ஈஸிடே, விஷால் மெகா மார்ட், லுலு ஹைபர் மார்க்கெட் உள்ளிட்டவற்றை சொல்லலாம். இந்த பட்டியலில் இந்தியாவின் முன்னணி ரீடெய்ல் செயின் நிறுவனங்களில் ஒன்றாக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக விஷால் மெகா மார்ட் திகழ்கிறது. நம்மில் பலருக்கும் டிமார்ட் தெரிந்திருக்கும்...

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் டிமார்ட் வந்துவிட்டது. ஆனால் விஷால் மெகா மார்ட் அந்த அளவிற்கு பிரபலம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தில் ஊட்டியில் மட்டுமே இருப்பதாக தெரிகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் கிளைகளை வைத்திருக்கிறது. உதாரணமாக டெல்லி, கர்நாடகா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், அசாம், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், திரிபுரா, ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கர்நாடகாவை எடுத்து கொண்டால் கடக், பெங்களூரு, மைசூரு, ஹூப்ளி, ஷிவமோகா ஆகிய மாவட்டங்களில் கிளைகளை விரித்து செயல்பட்டு வருகிறது..

10க்கும் மேற்பட்ட விஷால் மெகா மார்ட் கிளைகள் இருக்கின்றன. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் 30 மாநிலங்களில் உள்ள 458 நகரங்களில் 696 கடைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த நிதியாண்டில் மட்டும் 10,716 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 632 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இந்த இடத்தில் முக்கியமான ஒரு கேள்வி எழுகிறது...

மற்றும் விஷால் மெகா மார்ட் இடையில் என்ன வேறுபாடு? டிமார்ட்டை பொறுத்தவரை மளிகை, அழகுசாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்டவற்றை குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. மொத்தமாக வாங்கினால் தள்ளுபடி கிடைக்கும். விஷால் மெகா மார்ட்டை பொறுத்தவரை தினசரி பயன்பாட்டு பொருட்கள், ஜவுளி, காலணி, வீட்டு உபயோகப் பொருட்கள் என கிட்டதட்ட டிமார்ட் ஸ்டைலில் தான் விற்கப்படுகின்றன..

இரண்டும் கடைகளின் வடிவமைப்பு, பராமரிப்பு, பொருட்களின் தள்ளுபடி போன்ற விஷயங்களில் மாறுபடுகின்றன. விஷால் மெகா மார்ட் டயர் 2, டயர் 3 நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் கிளைகளை விரித்து செயல்பட்டு வருகிறது. டிமார்ட் உடன் ஒப்பிடுகையில் சிறிய கடைகள் தான். குறைந்த பட்ஜெட்டில் தான் இடத்தை தேர்வு செய்து கட்டமைக்கின்றனர். ஜவுளி, வீட்டு உபயோகப் பொருட்களுக்கு அடிக்கடி சீசன் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன...

ஆன்லைன் மூலம் வாங்குவதற்கு எந்தவித ஆப்ஷனும் இல்லை. நேரடியாக சம்பந்தப்பட்ட கிளைகளுக்கு சென்று தான் பொருட்கள் வாங்க வேண்டும். ஜவுளி மற்றும் தினசரி வீட்டு உபயோகப் பொருட்களில் இருந்து தான் 73 சதவீத வருவாயை ஈட்டி வருகிறது. இதன் வளர்ச்சி வேகமாக நடைபெற்று வருவதால் விரைவில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கிளைகளை திறக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேசமயம் எப்படி பார்த்தாலும் டிமார்ட் விற்பனை, சலுகை உள்ளிட்டவற்றுக்கு ஈடாக முடியாது என்கின்றனர்...