ராட்சசன்’, ‘கைதி’ படத்தில் நடித்த சிறுமியா இது...? இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாங்க!.. இப்போ எப்டி இருக்காங்க தெரியுமா

மோனிகா சிவா, 'கைதி' படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த சிறுமி, தற்போது வளர்ந்து நாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 'கைதி 2' படத்திலும் அவர் நடிக்க உள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘கைதி’. இந்தப் படம் வெளியாகி பெரிய அளவில் ஹிட்டானது. லோகேஷ் கனகராஜின் ‘எல்சியூ’ கான்செப்டுக்கு அடித்தளமாக அமைந்தது. இந்தப் படத்தில் கார்த்தியின் மகள் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சிறுமி பேபி மோனிகா சிவா.
சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அமுதா கதாபாத்திரத்தில் சிறுமி மோனிகாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்துக்கு முன்பே விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படத்தில் நடித்திருப்பார் பேபி மோனிகா. அதிலும் இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
வளரும் குழந்தை நட்சத்திரமாக மோனிகாவின் படங்கள் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தன. இந்தப் படங்களுக்கு முன்னதாக 2017-ல் விஜய் நடிப்பில் வெளியான ‘பைரவா’ படத்தில் மோனிகா நடித்திருந்தார். விஜய், கார்த்தி, விஷ்ணு விஷால் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மோனிகா.
இதை தவிர்த்து, ‘ஆண் தேவதை’, ‘சங்குசக்கரம்’, ‘பெட்ரோமாக்ஸ்’ உள்ளிட்ட படங்களிலும் மோனிகா நடித்தார். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான ‘எறும்பு’ திரைப்படம் அவருக்கு மற்றொரு அடையாளத்தை பெற்றுதந்தது.
தமிழ் மட்டுமல்லாமல், மலையாளத்தில் மம்மூட்டியுடன் ‘தி பிரிஸ்ட்’ படத்திலும் நடித்து கலக்கியிருப்பார் மோனிகா. சிறு வயது குழந்தையாக ரசிகர்களால் கவனிக்கப்பட்ட மோனிகா தற்போது விடலைப்பருவத்தை எட்டியிருக்கிறார்
அவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரின் தற்போதைய புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், ‘கைதி’ பட சிறுமியா இது என ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்
ஆண்டு ‘கைதி 2’ படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தில் மோனிகா நடிப்பார் என தெரிகிறது. தொடர்ந்து இன்னும் சில ஆண்டுகளில் அவர் நாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.