நேற்று திருமணம்.. இன்று 6 மாத கர்ப்பம் - அசத்தல் அப்டேட் கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ்

மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று அவரது இரண்டாவது திருமணத்தை செய்துக் கொண்டார்.
தற்போது 6வது சீசனிலும் அவர் நடுவராக பணியாற்றுகிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல சமையல் துறை நிபுணர் ஆவார். தமிழ் திரையுலகில் நடக்கும் பிரபலங்களில் திருமண பண்டிகைகளுக்கு கேட்ரிங் சேவையை செய்வது மாதம்பட்டி ரங்கராஜின் நிறுவனம் தான்.
அது மட்டுமல்லாமல் தமிழ் திரைப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகராகவும் இருக்கிறார். அவருடைய முதல் படம் 'மெஹந்தி சர்கஸ்'. ஆனால் அவரை மக்கள் அதிகமாக அறிந்தது 'Cook with Comali' நிகழ்ச்சியின் மூலமாக. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனில், வெங்கடேஷ் பட்டின் இடத்தை மாற்றி அவர் நீதிபதியாக இணைந்தார். தற்போது 6வது சீசனிலும் அவர் நடுவராக பணியாற்றுகிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று அவரது இரண்டாவது திருமணத்தை செய்துக் கொண்டார். அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இவர் ஃபேஷன் டிசைனரான ஜாய் கிரிஸ்ல்டாவை திருமணம் செய்துக் கொண்டார். ஜாய் தமிழ் திரையுலகில் புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.
மேலும் தற்பொழுது மாதம்பட்டி ரங்கராஜ் அவரது மனைவி கிரிஸ்ல்டா 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார். இது நெட்டிசன்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது. நேற்று திருமணம் இன்று 6 மாதம் கர்ப்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
மாதம்பட்டி ரங்கராஜ் முதல் திருமணம் ஸ்ருதியுடன் நடைப்பெற்றது மேலும் அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.