மணல் கொள்ளையில் ரூ.40,000 கோடி ஊழல்

மணல் கொள்ளையில் ரூ.40,000 கோடி ஊழல்
பிரிவினைவாதம் என்ற புற்றுநோய், தி.மு.க.,வின் ரத்தத்தில் புரையோடி கொண்டிருக்கிறது

பிரிவினைவாதம் என்ற புற்றுநோய், தி.மு.க.,வின் ரத்தத்தில் புரையோடி கொண்டிருக்கிறது என்பதை, சமீபத்தில் கட்சியினரிடம் பேசியபோது, முதல்வர் ஸ்டாலின் தன்னை அறியாமல் உறுதிப்படுத்தி இருக்கிறார்

அவரின் ஆட்சியில் நடந்துள்ள ஊழல் பட்டியல் நீளமானது. 'டாஸ்மாக்' ஊழலாக அறிவிக்கப்பட்டது, 10,000 கோடி ரூபாய்; உண்மையில் நடந்ததாக சொல்லப்படுவது 30,000 கோடி ரூபாய். மணல் கொள்ளை வாயிலாக, 40,000 கோடி ரூபாய்; 20 அமைச்சர்கள் செய்த பல கோடி ரூபாய் ஊழல்கள் பற்றி தனித்தனியாக பட்டியல் தயாராகி வருகிறது.

இப்படி சாம்ராஜ்யம் நடத்தும் ஸ்டாலின், அவரது ரத்த சொந்தங்களால் தான் தமிழர்களின் மானம் காற்றில் பறக்கிறது. மும்மொழி கொள்கை அறிவிப்பில், மூன்றாவது மொழி இந்திய மொழிகளில் ஒன்று என்பதற்கும், ஹிந்தி மொழி என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் உளறும் ஸ்டாலின், முதல்வராக தொடர தகுதியானவரா?