​​​​​​​முதல்வர் ஸ்டாலின் நாளை தூத்துக்குடி வருகை: மின்சார கார் தொழிற்சாலையை திறந்துவைக்கிறார்..

​​​​​​​முதல்வர் ஸ்டாலின் நாளை தூத்துக்குடி வருகை: மின்சார கார் தொழிற்சாலையை திறந்துவைக்கிறார்..
தூத்​துக்​குடி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள மின்​சார கார் தொழிற்​சாலை திறப்பு விழா மற்​றும் மினி முதலீட்​டாளர்

தூத்துக்குடி: தூத்​துக்​குடி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள மின்​சார கார் தொழிற்​சாலை திறப்பு விழா மற்​றும் மினி முதலீட்​டாளர் மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நாளை (ஆக.4) தூத்​துக்​குடி வரு​கிறார்.

வியட்​நாம் நாட்டை சேர்ந்த வின்ஃ​பாஸ்ட் நிறு​வனம் ரூ.16 ஆயிரம் கோடி​யில், ஆண்​டுக்கு 1.50 லட்​சம் வாக​னங்​களை உற்​பத்தி செய்​யும் வகை​யில் தூத்​துக்​குடி​யில் மின்​சார கார் உற்​பத்தி தொழிற்​சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொண்​டது.

இந்த ஆலைக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கடந்த ஆண்டு அடிக்​கல் நாட்​டி​னார். முதல்​கட்​ட​மாக ரூ.1,119.67 கோடி​யில் 114 ஏக்​கரில் தொழிற்​சாலை அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதில் 2 பணிமனை​கள், 2 கிடங்​கு​கள், கார் பரிசோதனை செய்​யும் இடம் உள்​ளிட்​டவை அமைக்​கப்​பட்​டுள்​ளன. முதல்​கட்ட கார் உற்​பத்​திக்​கான பணி​கள் நிறைவடைந்த நிலை​யில் வி.எப்​-6, வி.எப்-7 வகை கார்​கள் இங்கு உற்​பத்தி செய்​யப்​பட்​டு, விற்​பனைக்கு தயார் செய்​யப்​பட்​டுள்​ளன.

வின்ஃ​பாஸ்ட் மின்​சார கார் தொழிற்​சாலை திறப்பு விழா நாளை (ஆக.4) நடை​பெறுகிறது. விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சென்​னை​யில் இருந்து தனி விமானம் மூலம் நாளை காலை 10 மணிக்கு தூத்​துக்​குடி விமான நிலை​யம் வரு​கிறார்.

முதலீட்டாளர்கள் மாநாடு: அங்​கிருந்து கார் மூலம் வின்ஃ​பாஸ்ட் ஆலைக்​குச் செல்​கிறார். அங்கு நடை​பெறும் விழா​வில் ஆலையை திறந்து வைத்​து, கார் விற்​பனையை தொடங்​கிவைக்​கிறார். தொடர்ந்​து, தூத்​துக்​குடி மாணிக்​கம் மகாலில் நடை​பெறும் முதலீட்​டாளர்​கள் மாநாட்​டில் பங்​கேற்​கிறார். மாநாட்​டில் பல்​வேறு தொழில் முதலீடு​கள் தொடர்​பாக முதல்​வர் முன்​னிலை​யில் புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின்​றன.

மேலும், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மதி​யம் 12.45 மணி​யள​வில் தூத்​துக்​குடி விமான நிலை​யத்​தில் இருந்து தனிவிமானம் மூலம் சென்​னைக்கு செல்​கிறார். தூத்​துக்​குடி வரும் முதல்​வருக்கு சிறப்​பான வரவேற்பு அளிக்க திமுக சார்​பில் ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன...

முதல்​வர் பங்​கேற்​கும் நிகழ்ச்​சிகளில் திமுக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள், பொது​மக்​கள் திரளாகப் பங்​கேற்​கு​மாறு தூத்​துக்​குடி வடக்கு மாவட்​டச் செய​லா​ள​ரான அமைச்​சர் பெ.கீ​தாஜீவன் கேட்டுக் கொண்​டுள்​ளார்.