ரூ. 2.4 லட்சம் செலவில் உயிருள்ள தாய்க்காக சவப்பெட்டி வாங்கிய மகன்: சீனாவில் வியப்பான சம்பிரதாயம்!

ரூ. 2.4 லட்சம் செலவில் உயிருள்ள தாய்க்காக சவப்பெட்டி வாங்கிய மகன்: சீனாவில் வியப்பான சம்பிரதாயம்!
ரூ. 2.4 லட்சம் செலவில் உயிருள்ள தாய்க்காக சவப்பெட்டி வாங்கிய மகன்: சீனாவில் வியப்பான சம்பிரதாயம்!

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் தனது 70 வயது தாயின் நீண்ட ஆயுளுக்காகச் செய்த மகன் செய்த அசாதாரணமான செயல் இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. உயிருடன் இருக்கும் தனது தாய்க்காக சவப்பெட்டியை வாங்கிய அந்த மகன், அதை வீட்டிற்குக் கொண்டு வர 16 பேரையும் வாடகைக்கு அமர்த்தினார். இந்தச் செயல் நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தென் சீனாவில் உள்ள ஹுனான் மாகாணம், சாங்டே, டாயுவான் கவுண்டி, சுவாங்சிகோ டவுனைச் சேர்ந்த அந்த மகன், தனது தாய்க்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் நீண்ட ஆயுளையும் கொண்டுவரும் என்ற நம்பிக்கையில்தான் இந்தச் செயலை செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வின் வீடியோ சீன சமூக ஊடக தளமான டூயினில் (Douyin) பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. சவுத் சீனா மார்னிங் போஸ்ட் (South China Morning Post) வெளியிட்ட செய்தியின்படி, அந்த வீடியோவில் உற்சாகமான மூதாட்டி ஒருவர் சவப்பெட்டிக்குள் அமர்ந்து விசிறியைப் பிடித்துக் கொண்டிருப்பதும், ஆட்கள் அதை ஊர்வலமாகச் சுமந்து செல்வதும் காட்டப்பட்டுள்ளது.

இந்த ஊர்வலத்திற்கு முன்னால் இசைக்குழு இசை வாசித்தது, பெரிய அளவிலான ஆர்வமுள்ள பார்வையாளர்களை ஈர்த்தது. வீட்டிற்கு வந்த பிறகு, ஊதுபத்தி மற்றும் படையல்களுடன் பாரம்பரிய சடங்கு நடத்தப்பட்டது. இதுபோன்ற நிகழ்வுகளை இதற்கு முன் 3 முறை பார்த்துள்ளதாக கிராமவாசி தெரிவித்தார்.

குய்ஜோவ் ரேடியோ டிவி நிலையத்திடம் பேசிய கிராமவாசி ஒருவர், "இதன் முக்கிய நோக்கம் பக்தி உணர்வை வெளிப்படுத்துவதே ஆகும். இது கிராமப்புற பாரம்பரியம். பொதுவாக வயதானவர்கள் இதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள், ஆனால் இந்நாட்களில் இது மிகவும் பொதுவானது அல்ல" என்று கூறினார். இந்த சடங்கிற்கு $2,800 (இந்திய மதிப்பில் சுமார் ₹2.4 லட்சம்) செலவானதாக அந்தக் கிராமவாசி தெரிவித்தார். இதில் விருந்து, ஹார்ன் வாசிப்பவர்கள் மற்றும் சவப்பெட்டி சுமப்பவர்களுக்கான செலவும் அடங்கும்.

சீன கலாச்சாரத்தில் சவப்பெட்டியின் சிறப்பு

சீன கலாச்சாரத்தில், சவப்பெட்டிகள் சுபமாக கருதப்படுகின்றன. ஏனெனில், சவப்பெட்டி என்பதற்கான சீன வார்த்தையான 'குவான்சாய்' (guancai), "அதிகாரபூர்வ செல்வம்" (official wealth) என்பதற்கு ஒத்ததாக ஒலிக்கிறது. உயிருடன் இருக்கும் வயதானவர்கள் சவப்பெட்டியை அனுபவிப்பது ஆசீர்வாதம், நீண்ட ஆயுள் மற்றும் அமைதியைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. பல கிராமங்களில், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் சொந்த சவப்பெட்டிகளைத் தயாரித்து வீட்டிலேயே வைத்திருக்கிறார்கள். உயிருடன் இருக்கும்போது நடத்தப்படும் இந்த சடங்குகள் "கொண்டாட்டங்கள்" என்று அழைக்கப்படுகின்றன, இது மரணத்தை அமைதியான முறையில் அணுகும் விதத்தைக் காட்டுகிறது.