டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட மிகப்பெரிய குட்நியூஸ் - மாதம் ரூ.2000 உதவித் தொகை

Tamilnadu Government : 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ் முதுகலைப் பட்டம் (தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன்) மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையுடன் நடத்தப்படும் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு (P.G. MA. In Tamil) சேர்க்கை நடக்க உள்ளது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த
தமிழ் முதுகலைப் பட்டம் (Five Years Integrated Post Graduate M.A. in Tamil), தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு (M.A. Tamil) மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு (Ph.D.) ஆகியன ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்றது. 2025-26ஆம் கல்வியாண்டில் தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழ் முதுகலைப் பட்ட மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பெறவுள்ளது.